முகப்பு > சினிமா

திரையரங்குகளில் மெர்சல் படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி மனு!

October 12, 2017

திரையரங்குகளில் மெர்சல் படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி மனு!


தமிழகத்தில் தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கும் 41 திரையரங்குகளில் விஜய் நடிக்கும் மெர்சல் திரைப்படத்தை வெளியிட தடைவிதிக்கக் கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. 

இது தொடர்பான வழக்கு, நீதிபதி ரவிச்சந்திரபாபு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை பெரம்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜி. தேவராஜன் என்பவர்,  கூடுதல் கட்டணம் வசூலிக்கும் 41 திரையரங்குகளில் மெர்சல் திரைப்படத்தை வெளியிட தடைவிதிக்கக் கோரினார். 
விழாக்காலங்களில் படம் வெளியாகும் முதல் 5 நாட்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடவும் வேண்டுகோள் விடுத்தார். இதனை விசாரித்த நீதிபதி, வழக்கு பொதுநல நோக்குடன் இருப்பதால் வழக்கை தலைமை நீதிபதி அமர்வு முன் பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார்.

இருப்பினும், இந்த விவகாரத்தில், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது குறித்து, தலைமை நீதிபதி அமர்வை அனுக நீதிபதி ரவிச்சந்திரபாபு அறிவுறுத்தினார்.  

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்