முகப்பு > சினிமா

விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவான அண்ணாதுரை படத்தின் ட்ரைலர் வெளியானது!

October 11, 2017

விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவான அண்ணாதுரை படத்தின் ட்ரைலர் வெளியானது!விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேசன் மற்றும் ராதிகா சரத்குமாரின் ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும், புதுமுக இயக்குநர் ஸ்ரீனிவாசன் இயக்கும் திரைப்படம் அண்ணாதுரை. இப்படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாகவும், தமிழ் சினிமாவிற்கு புதுவரவான டயானா சம்பிகா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகும் என்று படக்குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் ட்ரைலரை வெளியிட்டார்.


இதுவரை கதாநாயகனாக, இசையமைப்பாளராக அவதாரம் எடுத்திருந்த விஜய் ஆண்டனி இப்படத்தில் எடிட்டராக புதுஅவதாரம் எடுத்துள்ளார். இப்படத்தின் இசையமைப்பாளரும் விஜய் ஆண்டனியே. விஜய் ஆண்டனியின் கடைசி இரண்டு படங்கள் சரியாக போகாததால் அண்ணாதுரை படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில் படம் டிசம்பர் மாதம் கிருஸ்துமஸுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்