முகப்பு > சினிமா

​விஜய் நடித்த ‘பைரவா’ படத்திற்கு திடீர் சிக்கல் - திட்டமிட்டபடி நாளை வெளியாகுமா?

January 11, 2017

​விஜய் நடித்த ‘பைரவா’ படத்திற்கு திடீர் சிக்கல் - திட்டமிட்டபடி நாளை வெளியாகுமா?


விஜய் நடித்த பைரவா படத்தின் தலைப்புக்கு தடை விதிக்க மறுத்துவிட்ட சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றம், மனுதாரரின் மனுவுக்கு பதிலளிக்குமாறு படத் தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளது. 

சேலத்தைச் சேர்ந்த பொருள்தாஸ், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நாய் ஒன்றை முதன்மை கதாபாத்திரமாக வைத்து, தான் எழுதி உள்ள கதையை அனிமேஷன் முறையில் திரைப்படமாக தயாரிக்க முடிவு செய்திருப்பதாகவும், அந்த படத்துக்கு பைரவா என தலைப்பு வைத்து கடந்த 2015ஆம் ஆண்டு பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தற்போது விஜய் நடித்து வெளியாக உள்ள படத்துக்கு பைரவா என பெயர் சூட்டப்பட்டுள்ளதை அறிந்ததும், படத் தலைப்பை மாற்றுமாறு விஜயா புரொடக்ஷனுக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. 

தனது கோரிக்கையை படத் தயாரிப்பு நிறுவனம் ஏற்காததால், தனது படத் தலைப்பான பைரவாவை பயன்படுத்த தயாரிப்பாளர் ரவிச்சந்திரனுக்கு தடை விதிக்க வேண்டுமெனவும் மனுவில் கோரப்பட்டிருந்தது. 

இந்த மனுவை விசாரித்த சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றம், மனுதாரர் கடைசி நேரத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், எதிர் மனுதாரரின் கருத்தை கேட்காமல் இடைக்கால தடை விதிக்க முடியாதென தெரிவித்தது. 
மேலும், இந்த வழக்கில் பைரவா படத் தயாரிப்பாளர் இன்று பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தது. 

Categories : சினிமா : சினிமா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்