இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

“சிம்புவால் நடுத்தெருவுக்கு வந்துவிட்டேன்” - குமுறும் தயாரிப்பாளர்!

December 1, 2017 எழுதியவர் : krishna எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
8511 Views

சிம்பு, ஸ்ரேயா, தமன்னா ஆகியோர் நடிப்பில், ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் உருவான திரைப்படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். இப்படத்தில் சிம்பு மூன்று வேடங்களில் நடிப்பதாக வெளியான தகவலையடுத்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. பெரும் தோல்வியை சந்தித்ததோடு திரை விமர்சகர்களிடையே மோசமான விமர்சனங்களைப் பெற்றது.

இது குறித்து செய்தியாளர்களை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் சந்தித்தனர். தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் பேசியபோது, படப்பிடிப்புத் தொடங்குவதற்கு முன்பே சிம்பு பல்வேறு இடையூறுகளை செய்ததாகவும், படப்பிடிப்பு நடத்த திட்டமிட்ட லொக்கேசன்களை அடிக்கடி மாற்றியும், படப்பிடிப்பு நடத்த திட்டமிட்ட நாளுக்கு வராமல் படப்பிடிப்பை ரத்து செய்து தயாரிப்பு தரப்பிற்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்தார். மேலும், படம் எடுக்க தன்னிடம் கொடுக்கப்பட்ட கதை ஒன்றாகவும், படப்பிடிப்பு ஆரம்பித்ததும் முழுவதும் சிம்புவின் கட்டுபாட்டில் சென்றுவிட்டதாகவும், அவரது விருப்பப்படியே கதைகள் மாற்றியமைக்கப்பட்டு எதிர்பார்த்த கதை படமாக்கப்படவில்லை என்றும் வேதனை தெரிவித்தார்.

35% படப்பிடிப்பு நிறைவடைந்தவுடன் படத்தை வெளியிட சிம்பு வற்புறுத்தியதாகவும், மீதி கதையை இரண்டாம் பாகமாக தயாரித்து வெளியிடலாம் என்றும், இரண்டாம் பாகத்தில் சம்பளம் வாங்காமல் இலவசமாகவே நடித்து தருவதாகவும் சிம்பு தெரிவித்ததாக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தெரிவித்தார். கதையின் தொடக்கமும் சரியில்லாமல், முடிவும் சரியில்லாமல் இருந்தால் படம் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்று எச்சரித்ததாகவும், எப்படிப்பட்ட சூழ்நிலை வந்தாலும் அதற்கு தான் பொறுப்பேற்பதாக சிம்பு உறுதியளித்ததாக தெரிவித்தார்.

படம் வெளியாகி தோல்வியை சந்தித்தபின், மீண்டும் ஒருநாள் தயாரிப்பாளரை அழைத்து தான் திருந்திவிட்டதாகவும் படத்தின் இரண்டாம் பாகத்தை உடனடியாக தொடங்கலம் என்று சிம்பு கூறியதை நம்பி தான் வந்ததாகவும், ஆனால் மீண்டும் 15 நாட்களுக்கு மேல் தன்னை காக்க வைத்து ஏமாற்றிவிட்டதாகவும் வேதனையோடு தெரிவித்தார். மேலும், சிம்புவை வைத்து தயாரிப்பாளர்கள் யாரும் படம் தயாரிக்க முன்வராத நிலையில், அவரை நம்பி படம் எடுக்க முன்வந்த தன்னை சிம்பு மோசம் செய்துவிட்டார் என்று மைக்கேல் ராயப்பன் தெரிவித்தார். சிம்புவால் தான் நடுத்தெருவுக்கு வந்துவிட்டதாகவும், தன்னுடைய இந்த நிலைக்கு முழுக்க முழுக்க சிம்புவே காரணம் என்று தெரிவித்த மைக்கேல் ராயப்பன், இதனால் தனது சொத்துகள் அனைத்தையும் விற்று விட்டாலும், இழப்பீடு கேட்டு தன்னை நெருக்கும் விநியோகஸ்தர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை என்று வேதனை தெரிவித்தார்.

இது குறித்து பேசிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், சிம்புவுக்கும் தனக்கும் தனிப்பட்டமுறையில் எந்த பிரச்னை இல்லை என்றும், படப்பிடிப்பின் போது சிம்பு பல இடையூறுகள் செய்தது உண்மைதான் என்று தெரிவித்தார். அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படப்பிடிப்பு தொடங்கியது முதலே படம் தங்கள் கைமீறி சென்றுவிட்டதாக தெரிவித்தார். மேலும் படத்தில் வரும் மதுரை மைக்கேல் பகுதியை 20 நிமிடங்களும், தாத்தாவாக நடித்த பகுதியை 20 நிமிடங்கள் மட்டுமே எடுக்க திட்டமிட்டதாகவும், ஆனால் சிம்பு செய்த குளறுபடிகள் காரணமாக மதுரை மைக்கேல் பகுதியை ஒரு மணி நேரத்திற்கு நீட்டித்ததாகவும் தெரிவித்தார்.

படத்தின் இரு பாகங்களும் ஓடவில்லையெனில், தனது இயக்கத்திலேயே மற்றொரு படம் நடித்து தருவதாக சிம்பு வாக்குறுதி அளித்ததால் இது குறித்து தான் எதுவும் புகார் கூறவில்லை என்று தெரிவித்தார். தன்னிடம் கூறியதைப் போலவே தயாரிப்பாளரிடம் கூறியதாகவும் தெரிவித்தார். திரிஷா இல்லனா நயன்தாரா படத்திற்கு பிறகு கமர்சியல் படம் எடுக்க நினைத்த தன்னை சிம்பு ஏமாற்றிவிட்டதாக தெரிவித்தார்.

தயாரிப்பாளர் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், படப்பிடிப்பிற்கு ஒழுங்காக வராத சிம்பு, டப்பிங்கையாவது முடித்துக் கொடுப்பார் என்று எதிர்பார்த்ததாகவும், அதற்கும் வராமல் வீட்டின் பாத்ரூமில் இருந்து சிம்பு டப்பிங் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மிக்ஸிங்கிற்காக 4 Frames ராமகிருஷ்ணனிடம் சென்ற போது இது போன்ற ஒரு மோசமான குரலை தன்னால் மிக்ஸ் செய்ய முடியாது வேறு இடம் பார்த்து கொள்ளுங்கள் என்று தெரிவித்துவிட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது. அதனால் 75,000 ரூபாய் செலவுசெய்து மென்பொருளை வாங்கி ஓரளவிற்கு குரலை சரி செய்து படத்தை வெளியிட்டதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், 76 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டதில், 25 நாட்கள் மட்டுமே சிம்பு படப்பிடிப்பிற்கு வந்ததாக குமுறுகிறார் தயாரிப்பாளர்.

சிம்புவின் நடவடிக்கைகள் குறித்து இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரும் உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருந்தாலும், ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் மைக்கேல் ராயப்பனின் பகிரங்க குற்றச்சாட்டு கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிரத்னத்தின் இயக்கத்தில் புதிய படம் தொடங்குவதற்கான அறிவிப்புகள் வெளியான நிலையில் சிம்புவிற்கு ரெட் கார்ட் வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் இந்த செய்திக்கு மைக்கேல் ராயப்பன் மறுப்பு தெரிவித்திருப்பதோடு, சிம்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனக்கு உரிய இழப்பீடை பெற்றுத்தருமாறும் கோரிக்கை வைத்திருக்கிறார்.

Categories: சினிமா
Image
Image தொடர்புடைய செய்திகள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமா படமாக

நடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் முன்னோட்டம்,

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )