இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

கார்த்திக் சுப்புராஜின் அடுத்த தரமான சம்பவம் 'பேட்ட'

September 7, 2018 எழுதியவர் : nandhakumar எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
4037 Views

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் புதிய படத்தின் பெயர் 'பேட்ட' மற்றும் அதன் Motion Poster வெளியிடப்பட்டுள்ளது. மற்றும் அப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டு சமூக வலைத்தளங்களில் உலக அளவில் டரெண்டாகி வருகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் இப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். சுப்புராஜ் இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளிவந்த ஜிகிர்தண்டா திரைப்படம் ஒரு தரமான சம்பவம் என பலராலும் பாராட்டப்பட்டது.  

ஜிகிர்தண்டா வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜை நேரில் அழைத்து பாரட்டினார். அன்றே ரஜினிகாந்த் நான் சேது காதப்பாத்திரத்தில் நடிக்க விரும்பினேன் என கார்த்திக் சுப்புராஜிடம் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி பாபி சிம்ஹாவின் நடிப்பைப் பார்த்தபோது தனக்கு 'பரட்டை' கதாபாத்திரம் ஞாபகம் வந்ததாக கூறியிருந்தார் ரஜினிகாந்த்.

இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள படத்தின் FIRST LOOK POSTER மற்றும் படத்தின் பெயர் பேட்ட பட்டயை கிளப்பும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

'பேட்ட' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். திரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதின் சித்திக் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். 

இப்படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார் ராக்ஸ்டார் அனிருத் ரவிசந்திரன். மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு டேராடூன், டார்ஜிலிங் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. மதுரையிலும் படப்பிடிப்பு நடக்க இருந்தது. ஆனால் சில காரணங்களால் சென்னை புறநகரில் பிரம்மாண்ட செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் ரஜினிகாந்த் கல்லூரி ஹாஸ்டல் வார்டன்னாகவும், விஜய்சேதுபதி வில்லனாகவும் நடிக்கிறார்கள் என சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஜினி நடிக்க வேண்டிய பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பட்டையை கிளுப்புவனா?  'பேட்ட'.... கார்த்திக் சுப்புராஜின் அடுத்த தரமான சம்பவம் 'பேட்ட'-ஐக்காக  ரஜினி ரசிகர்கள் Waiting 

Categories: சினிமா
Image
Image தொடர்புடைய செய்திகள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமா படமாக

நடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் முன்னோட்டம்,

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )