இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது நோட்டா ட்ரெய்லர்!

September 6, 2018 எழுதியவர் : priyadharshini எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2260 Views

அரசியல் பிரச்சாரங்கள் நாடு முழுக்க சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள இந்த நேரத்தில் சரியாக 'நோட்டா' படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இதன் முன்னோட்டம் இன்று 4 மணிக்கு வெளியாக உள்ளதாக அப்படத்தின் கதாநாயகன் விஜய் தேவரகொண்டா தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் நான் அரசியலை வெறுக்கிறேன். ஆனால், அரசியல் செய்ய வேண்டும் என்றால் இப்படித்தான் செய்து முடிப்பேன் என்று பதிவிட்டுள்ளார்.

தெலுங்கில் அறிமுகமாகி சில படங்களில் நடித்திருந்தாலும் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா வட்டாரம் முழுக்க  பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. இதையடுத்து இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான கீதா கோவிந்தம் படமும் மாபெரும் ஹிட்டடித்துள்ளது.

அர்ஜுன் ரெட்டி படத்திற்குப் பிறகு இவருக்கு இருந்த ரசிகர்கள் எண்ணிக்கை கீதா கோவிந்தம் படத்தின் மூலம் 
இருமடங்கானது. குறிப்பாக இளம் பெண்கள் பெரும்பாலானோரை ஈர்த்துள்ளார் விஜய்  தேவரகொண்டா. இதுவரை காதல் படங்களில் நடித்த இவர் தற்போது  அரசியல் படமான நோட்டாவில் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம்  தமிழில் முதன்முறையாக அறிமுகமாகிறார் விஜய் தேவரகொண்டா. 

தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் படம் தயாராகி வருகிறது. இதனால் படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிகவும் அதிகமாகியுள்ளது. இதையடுத்து, இன்று மாலை நோட்டா ட்ரெய்லர் வெளியாக உள்ள  நிலையில் மேலும், ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தை, அரிமா நம்பி',  'இருமுகன்' படங்களை இயக்கிய ஆனந்த் ஷங்கர், இயக்குகிறார். சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசை அமைத்து வருகிறார். மேலும் சத்யராஜ் மற்றும் நாசர் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Categories: சினிமா
Image
Image தொடர்புடைய செய்திகள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமா படமாக

நடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் முன்னோட்டம்,

தற்போதைய செய்திகள் Sep 26
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )