இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Breaking News

Jallikattu Game

​வெளியானது சர்கார் படத்தின் 'சிம்டாங்காரன்' பாடல்!

September 24, 2018 எழுதியவர் : manojb எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2798 Views

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின், சிங்கிள் ட்ராக் வரும் 24ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என பட நிறுவனம் அறிவித்திருந்த நிலையில் 'சிம்டாங்காரன்' எனும் அந்த பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இதையடுத்து  ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். 
 
நடிகர் விஜய்யின் சர்கார் படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. முருகதாஸ்-விஜய் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகும் இப்படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் இரண்டாவது முறையாக விஜயுடன் ஜோடி சேர்ந்துள்ளார். 

ஏற்கனவே விஜய்-முருகதாஸ் கூட்டணியில் உருவான துப்பாக்கி மற்றும் கத்தி படங்கள் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. எனவே இப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

சர்கார் படம் இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில், சர்கார் பற்றிய புதிய தகவல்கள் தினம்தோறும் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 
ஏற்கனவே விஜய் நடிப்பில் மெர்சல் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த ''ஆளப்போறான் தமிழன்" பாடல் பெரியளவில் வைரலானது. எனவே சர்கார் படத்தின் இசை குறித்தும் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அதனை சிம்டாங்காரன் பாடல் பூர்த்தி செய்துள்ளது.


ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதியை அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் 2ம் தேதி சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Categories: சினிமா
Image
Image தொடர்புடைய செய்திகள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமா படமாக

நடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் முன்னோட்டம்,

தற்போதைய செய்திகள் Oct 23
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )