இன்றைய வானிலை

  • 27 °C / 81 °F

Jallikattu Game

​"சினிமாவின் இலக்கியம் பரியேறும் பெருமாள்" - இயக்குநர் சங்கர் பாராட்டு!

October 23, 2018 Posted By : manojb Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
12905 Views

கதிர் நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘பரியேறும் பெருமாள்'. இந்த படத்தை மாரி செல்வராஜ் என்பவர் இயக்கியிருந்தார். இவர் இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவர்.

இப்படத்தை ‘அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா' போன்ற படங்களை இயக்கிய தமிழ் சினிமாவின் முன்னணி இளம் இயக்குநர் பா.இரஞ்சித், தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘நீலம் புரொடக்ஷன்ஸ்' மூலம் தயாரித்திருந்தார். கதிருக்கு ஜோடியாக ‘கயல்' ஆனந்தி நடித்திருந்தார். மேலும், இப்படத்தில் கருப்பை என்ற பெயருடைய கன்னி வகை நாய் ஒன்று நடித்திருந்தது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இதற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருந்தார், ஆர்.கே.செல்வா படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார்.

இந்த படம் விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடையேவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, இப்படத்தை பார்த்து ரசித்த பிரபல இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் படக்குழுவினரை வெகுவாக பாராட்டி ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார். அதில் பரியேறும் பெருமாள் சினிமாவில் ஒரு இலக்கியம் என்றும், அது மனநிம்மதியை குலைத்துவிட்டது என்றும் குறிப்பிட்டிருந்தார். பதிலுக்கு பட தயாரிப்பாளர் பா.ரஞ்சித் அவர்கள் ட்விட்டரில் நன்றி தெரிவித்திருந்தார்.

Categories: சினிமா
Image
Image தொடர்புடைய செய்திகள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமா படமாக

நடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் முன்னோட்டம்,

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )