இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Jallikattu Game

​அக்டோபர் 4ம் தேதி வெளியாகிறது '96'

September 11, 2018 எழுதியவர் : manojb எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
724 Views

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா ஆகியோரின் நடிப்பில் பரபரப்பாக உருவாகி வரும் ‘96’ படத்தின் ரிலீஸ் தேதியை நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கி வரும் இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் த்ரிஷா. இப்படத்தில் இளம் வயது விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர் வலம் வருகிறார்.

சமீபத்தில், படத்தின் சேட்டிலைட் ரைட்ஸை ‘சன் டிவி’ கைப்பற்றியது. இதையடுத்து ‘96’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் டீசரும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின்பு படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை, வெளியாகி ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது, இப்படத்தின் ரிலீஸ் தேதியை நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அடுத்த மாதம் அக்டோபர் 4ம் தேதி படம் வெளியாகுமென தெரிவித்துள்ளார். இதையடுத்து படத்தினை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 
 

Categories: சினிமா
Image
Image தொடர்புடைய செய்திகள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமா படமாக

நடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் முன்னோட்டம்,

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )