இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​ஏ.ஆர்.முருகதாஸிடம் 'க்ரீன் பார்க் ஹோட்டல் நினைவிருக்கிறதா?' எனக் கேட்ட ஸ்ரீரெட்டி!

July 11, 2018 எழுதியவர் : manojb எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
11045 Views

ஏ.ஆர்.முருகதாஸ் குறித்து சர்ச்சையாக நடிகை ஸ்ரீரெட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

தமிழில் சுசித்ரா போல தெலுங்கில் நடிகை ஸ்ரீரெட்டி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரைத்துறையில் பலர் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி வெட்டவெளியில் அரை நிர்வாண போராட்டம் நடத்தியவர். இதில் தெலுங்கு திரைத்துறையின் முன்னணி பிரபலங்கள் பலரும் சிக்கினர். இதனையடுத்து சிலருடன் தனியாக இருந்த புகைப்படங்களை கூட வெளியிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பினார் ஸ்ரீரெட்டி.

இப்படியிருக்க நடுவில் சில நாட்கள் அமைதி காத்து வந்த ஸ்ரீரெட்டி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் முருகதாஸ் பற்றிய சர்ச்சை பதிவொன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு மீண்டும் பரபரப்பு கிளப்பியுள்ளார். 

அதில் அவர் கூறியிருப்பதாவது, ஹாய் தமிழ் இயக்குநர் முருகதாஸ் ஜி... எப்படி இருக்கீங்க? க்ரீன் பார்க் ஹோட்டல் நியாபகமிருக்கா? வெளிகொண்டா ஸ்ரீனிவாஸ் மூலமாக நாம் சந்தித்தோம். அப்போது எனக்கு ஒரு கதாபாத்திரம் தருவதாக சத்தியம் செய்தீர்கள். ஆனால் நாம் நிறைய... இதுவரை நீங்கள் அந்த வாய்ப்பை கொடுக்கவில்லை. நீங்களும் ஒரு சிறந்த மனிதர் தான் என பதிவிட்டுள்ளார்.  


இது சமூகவலைத்தளத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இதுவரை தெலுங்கில் 2 படங்கள் மட்டுமே இயக்கியுள்ள ஏ.ஆர்.முருகதாஸ் இவ்வளவு பெரிய சர்ச்சைசியில் சிக்கியுள்ளார். இதுகுறித்து அவர் விளக்கம் அளித்தால் மட்டுமே எது உண்மை என்பது தெரியவரும். 

Categories: சினிமா
Image
Image தொடர்புடைய செய்திகள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமா படமாக

நடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் முன்னோட்டம்,

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )