முகப்பு > சினிமா

​‘தமிழினமே வீழாதே’.... மெர்சல் வரிகள்!

August 10, 2017

​‘தமிழினமே வீழாதே’.... மெர்சல் வரிகள்!விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் படம் மெர்சல். இப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இப்படத்தின் பாடல்கள் வரும் 20ம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கு முன்னோட்டமாய் நேற்று 30 வினாடிகள் உள்ள ஒரு பாடல் இசை மட்டும் வெளியிடப்பட்டது. இன்று அதைத்தொடர்ந்து ஒரு முழு பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

இப்பாடலில் ‘கண்டிப்பா எங்களுக்கு காவலா நீ வரணும்’ என்று விஜயின் அரசியல் வருகைக்கு தீனி போடும் வரிகள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், ‘உலகம் எல்லாம் ஆளபோறான் தமிழன்’, ‘தமிழண்டா எந்நாளும், சொன்னாலே திமிர் ஏறும்’, ‘காத்தோடகலந்தாலும் அதுதான் உன் அடையாளம்’ என்று தமிழர் அடையாளம் குறித்த பாடல் வரிகள் எழுதப்பட்டுள்ளன.

மேலும், பாடலில் ‘வாயில்லா மாட்டுக்கும் நீதியை அவன் தந்தானே’ போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. இது ஜல்லிக்கட்டு அரசியலை மனதில் வைத்து எழுதப்பட்டிருக்கிறது. மேலும், ‘வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்’ போன்ற வரிகளும் இதில் இடம்பெற்றுள்ளது ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டம் குறித்து பேசுவது போல வரிகளை அமைத்திருக்கிறது. மேலும், பாடலில் ஜல்லிக்கட்டு காளையின் சீறல் இசையாக சேர்க்கப்பட்டிருக்கிறது.
 
மேலும், தமிழ்மொழியின் தொன்மை அதை பாதுகாக்க வேண்டிய கடமை ஆகியவற்றைக் குறிப்பிடும் வகையில், ‘உலத்தின் முதல் மொழி உசுரென காத்தோம்’, ‘அன்பைக் கொட்டி எங்க மொழி அடித்தளம் போட்டோம்’ போன்ற வரிகள் சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழியின் பெருமைகளைப் பற்றி பேசிவிட்டு அதிலேயே ‘தமிழனமே வீழாதே’ என்று குறிப்பிட்டும் இயற்றியிருக்கிறார்கள்.

இந்த பாடல் வரிகளுக்கு இடையே ‘கண்டிப்பா எங்களுக்கு காவலா நீ வரணும்’ என்ற வரி ஒலித்துக் கொண்டே இருக்கும்படி பாடல் அமைத்து விஜய்க்கு அரசியல் அடித்தளம் போட்டுக்கொடுத்திருக்கிறார்கள்.

Categories : சினிமா : சினிமா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்