Skip to main content

மைனர் பெண்ணிற்கு நடக்கவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய ஆட்டோ ஓட்டுநர் கொலை!

May 13, 2019 737 views Posted By : shanmugapriyaAuthors
Image

சென்னையில் மைனர் பெண்ணுக்கு நடைபெறவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய ஆட்டோ ஓட்டுநரை, 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடினர். 

அயனாவரம் திக்காகுளத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்  ஜெபசீலன், அவரது மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க செல்லும்போது, வழிமறித்த கும்பல், ஜெபசீலனை வெட்டி படுகொலை செய்தனர். அதனை தடுக்க முயன்ற அவரது மனைவி பிரிசில்லாவையும் தாக்கியுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலையாளிகளை தேடி வருகின்றனர். 

கடந்த மாதம் 17ம் தேதி, அயநாவரம் பகுதிக்கு அருகே, 17 வயது பெண்ணிற்கும் 21 வயது ஆணிற்கும் திருமணம் நடக்கவிருந்ததாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, அத்திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. முன் விரோதம் காரணமாக போலீசாருக்கு ஜெபசீலன் தகவல் அளித்திருப்பார் என தெரிந்துகொண்ட பெண்ணின் குடும்பத்தினர் ஜெபசீலனை வெட்டி கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Categories: Crime
Image
தற்போதைய செய்திகள்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் பயிற்சி ஆட்டத்திலேயே இந்திய அணி தோல்வி.

3 hours ago

ஆந்திர ஆளுநர் நரசிம்மனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் ஜெகன்மோகன் ரெட்டி.

3 hours ago

மத்தியில் ஆட்சியமைக்க நரேந்திர மோடிக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு.

3 hours ago

குடியரசுத் தலைவரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி!

13 hours ago

மக்களவைத் திமுக குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு

16 hours ago

செஞ்சி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவனை கொலை செய்த மனைவி.

1 day ago

ராபர்ட் வத்ராவின் முன்ஜாமீனை ரத்து செ