Skip to main content

11ம் வகுப்பு மாணவிக்கு நடக்கவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் மீது தாக்குதல்!

May 11, 2019 679 views Posted By : shanmugapriyaAuthors
Image

தருமபுரி அருகே, 11ம் வகுப்பு மாணவிக்கு நடக்கவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் மீது மாணவியின் உறவினர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பென்னாகரம் அருகே பவளந்தூர் கிராமத்தில், பதினோராம் வகுப்பு மாணவிக்கு திருமணம் நடப்பதாக சைல்ட் லைன் அமைப்பு மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு விரைந்த அதிகாரிகள், திருமணத்தை தடுத்து நிறுத்தி, சிறுமியை காப்பகத்தில் ஒப்படைப்பதற்காக பேருந்தில் அழைத்துச்சென்றனர். 

பின் தொடர்ந்து சென்ற உறவினர்கள் 30-க்கும் மேற்பட்டோர், பேருந்தில் ஏறி சைல்டு லைன் அமைப்பினர் மற்றும் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர் சிறுமியை மீட்டுச் சென்றனர். அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Categories: Crime
Image
தற்போதைய செய்திகள்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் பயிற்சி ஆட்டத்திலேயே இந்திய அணி தோல்வி.

3 hours ago

ஆந்திர ஆளுநர் நரசிம்மனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் ஜெகன்மோகன் ரெட்டி.

3 hours ago

மத்தியில் ஆட்சியமைக்க நரேந்திர மோடிக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு.

3 hours ago

குடியரசுத் தலைவரிடம் ஆட