Skip to main content

டிசம்பர் 12ம் தேதி வெளியாகிறது சேரனின் அடுத்தபடம் குறித்த அறிவிப்பு!

November 29, 2018 199 views Posted By : manojbAuthors
Image

பிரபல நடிகரும், இயக்குநருமான சேரன் ‘பாரதி கண்ணம்மா' படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ‘பொற்காலம், தேசியகீதம், வெற்றிக்கொடிகட்டு, பாண்டவர் பூமி' போன்ற படங்களை இயக்கினார்.

‘ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து, மாயக்கண்ணாடி, பொக்கிஷம்' ஆகிய படங்களில் சேரனே ஹீரோவாகவும் நடித்து, இயக்கியிருந்தார். இது தவிர மற்ற இயக்குநர்கள் இயக்கிய ‘சொல்ல மறந்த கதை, பிரிவோம் சந்திப்போம், யுத்தம் செய்' போன்ற சில படங்களிலும் கதாநாயகனாக நடித்தார்.

தற்போது, சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் “எனது படைப்புகள் ஏன் வரவில்லை என்ற விசாரிப்புகள் நாளுக்குநாள் ட்விட்டரில் அதிகமாவது எனக்கு நம்பிக்கையையும், உத்வேகத்தையும் கொடுக்கிறது. நல்ல படைப்புகளைத் தேடும் அனைவருக்கும் நன்றி. ஒரு திரைப்படம் இயக்கி முடித்துவிட்டேன். வருகிற டிசம்பர் 12-ஆம் தேதி முறையாக தெரிவிப்பேன்” என்று ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார். இந்த படத்தில் பிரபல நடிகரும், இயக்குநருமான தம்பி இராமையாவின் மகன் உமாபதி ஹீரோவாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Categories: Cinema
Image

"அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்குத் தான் பொது சின்னம் ஒதுக்க முடியும்; விதிகளை மீறி நாங்கள் செயல்பட முடியாது!" - தேர்தல் ஆணையம்

55 minutes ago

அமமுக வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

56 minutes ago

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜாமீனில் உள்ள அதிமுக முன்னாள் பிரமுகர் பார் நாகராஜனுக்கு சிபிசிஐடி சம்மன்!

3 hours ago

நாடாளுமன்றத் தேர்தலில் இன்றுடன் நிறைவடைகிறது வேட்பு மனு தாக்கல்;