முகப்பு > வணிகம்

வாடகை வீட்டில் வசிக்கும் ‘ரேமண்ட்’ அதிபர்! - மகனால் வீதிக்கு வந்த கோடீஸ்வரர்!

August 09, 2017

வாடகை வீட்டில் வசிக்கும் ‘ரேமண்ட்’ அதிபர்! - மகனால் வீதிக்கு வந்த கோடீஸ்வரர்!இந்தியாவில் ஆண்களுக்கான உடைகளில் பெரும் தாக்கத்தை நிகழ்த்தியது ‘ரேமண்ட்’ நிறுவனம். இதைத் தோற்றுவித்தவர் விஜய்பத் சிங்கானியா. விஜய் சிங்கானியா குடும்பத்திற்கு சொந்தமாக 1960-களில் 14 மாடி கட்டிடம் கட்டப்பட்டது. இந்தக்கட்டிடம் 2007ல் 36 மாடி கொண்டதாக உயர்த்தப்பட்டு மேம்பட்டது. 

அதன்பிறகு, விஜய்பத் தனது நிறுவனத்தை தனது மகன் கௌதமிடம் ஒப்படைத்துவிட்டார். இந்நிலையில், இந்த வீட்டைக் குறித்து குடும்பத்தினருடம் போடப்பட்ட ஒப்பந்தத்தில், ஒவ்வொருவருக்கும் சுமார் 5,185 சதுர அடி உடைய வீடு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால், இன்றுவரை வீடு கொடுக்கப்படவில்லை. இதற்கு காரணம் தன் மகன் தான் என்றும், ரேமண்ட் நிறுவனத்தை தனது தனிப்பட்ட சொத்து போல அவர் நடத்துவதாகவும் கூறி விஜய்பத் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பான வழக்கு, ஆகஸ்ட் 22ம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது. ஒருகாலத்தில், இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருந்த விஜய்பத் தன்னுடைய மகனுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் வாடகை வீட்டில் வசிப்பது பல தரப்பிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

Categories : வணிகம் : வணிகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்