முகப்பு > வணிகம்

அமெரிக்காவை வீழ்த்தி உலக பொருளாதாரத்தில் முன்னுக்கு வரும் இந்தியா!

August 07, 2017

அமெரிக்காவை வீழ்த்தி உலக பொருளாதாரத்தில் முன்னுக்கு வரும் இந்தியா!


2050-இல் இந்தியா அமெரிக்க பொருளாதாரத்தை வீழ்த்தி முன்னணிக்கு செல்லும் என இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.

2050-இல் உலக பொருளாதாரத்தில் ஆதிக்கத்தை செலுத்த உள்ள 32 நாடுகளின் பட்டியலை இங்கிலாந்தில் இருந்து செயல்படும் PwC நிறுவனம் வெளியிட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தி, மக்களின் வாங்கும் சக்தி உள்ளிட்டவைகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

“தொலைநோக்கு பார்வை : 2015-இல் உலகின் பொருளாதார வரிசையின் மாற்றம்”  என்ற தலைப்பில்  வெளியிடப்பட்ட அறிக்கையில் அடுத்த 33 ஆண்டுகளில் உலகின் பொருளாதார வரிசையில் ஏற்பட உள்ள மாற்றங்கள் விளக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவை தவிர்த்த பிற முக்கிய பொருளாதார நாடுகள் இப்பட்டியலில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன. குறிப்பாக, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட இன்றைய உலகின் பொருளாதார சூப்பர் பவர் நாடுகளை இந்தியா, இந்தோனிசியா உள்ளிட்ட நாடுகள் பின்னுக்கு தள்ளிவிடும் என தெரியவந்துள்ளது.

இப்பட்டியலில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி சீனா முதலிடத்தையும், இந்தியா இரண்டாம் இடத்தையும், அமெரிக்கா மூன்றாம் இடத்தையும் பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2050இல் உலக பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தப் போகும் 32 நாடுகள் :

32. Netherlands — $ 1.496 trillion. 

31. Colombia — $ 2.074 trillion. 

30. Poland — $ 2.103 trillion. 

29. Argentina — $ 2.365 trillion. 

28. Australia — $ 2.564 trillion. 

27. South Africa — $ 2.570 trillion. 

26. Spain — $ 2.732 trillion. 

25. Thailand — $ 2.782 trillion. 

24. Malaysia — $ 2.815 trillion. 

23. Bangladesh — $ 3.064 trillion. 

22. Canada — $ 3.1 trillion. 

21. Italy — $ 3.115 trillion. 

20. Vietnam — $ 3.176 trillion. 

19. Philippines — $ 3.334 trillion. 

18. South Korea — $ 3.539 trillion. 

17. Iran — $ 3.900 trillion. 

16. Pakistan — $ 4.236 trillion. 

15. Egypt — $ 4.333 trillion. 

14. Nigeria — $ 4.348 trillion. 

13. Saudi Arabia — $ 4.694 trillion. 

12. France — $ 4.705 trillion. 

11. Turkey — $ 5.184 trillion. 

10. United Kingdom — $ 5.369 trillion. 

9. Germany — $ 6.138 trillion. 

8. Japan — $ 6.779 trillion. 

7. Mexico — $ 6.863 trillion. 

6. Russia — $ 7.131 trillion. 

5. Brazil — $ 7.540 trillion.

4. Indonesia — $ 10.502 trillion. 

3. United States — $ 34.102 trillion. 

2. India — $ 44.128 trillion. 

1. China — $ 58.499 trillion.

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்