முகப்பு > வணிகம்

​எஸ்யூவி, ஆடம்பர செடன் கார்களின் விலை விரைவில் உயரப்போகிறது..!!

August 07, 2017

​எஸ்யூவி, ஆடம்பர செடன் கார்களின் விலை விரைவில் உயரப்போகிறது..!!


ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வெஹிகிள் எனப்படும் எஸ்யூவிக்கள் அல்லது ஆடம்பர செடன் கார்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? இந்த வகை கார் வாங்க திட்டம் இருந்தால் உடனடியாக கார் வாங்கிவிடுங்கள்.. ஏனெனில் அடுத்த மாதம் இந்த வகை கார்கள் விலை ஏற இருக்கிறது.

கடந்த ஜூலை மாதம் 1ம் தேதி முதல் நாடெங்கிலும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை அமலானது. இதன் காரணமாக இந்த வகை கார்களுக்கு முன்னதாக 50% ஆக இருந்த வரி 43% ஆக குறைந்தது.

இதனால் இந்த வகை கார்களின் விலை கணிசமாக குறைந்தது. இந்நிலையில் இந்த வகை கார்களுக்கான வரியை உயர்த்த வேண்டுமென வலுவான கோரிக்கை எழுந்தது.

இந்த கோரிக்கை மீது ஜிஎஸ்டி கவுன்சிலில் விவாதிக்கப்பட்டது, இதற்கு கவுன்சிலின் ஒப்புதல் கிடைத்ததையடுத்து எஸ்யூவி மற்றும் ஆடம்பர செடன் கார்களுக்கான வரி 15% இருந்து 25% ஆக அதிகரிக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வரிவிதிப்பு அதிகரிக்கப்படும் போது 1,500சிசி க்கு அதிகமான திறன் கொண்ட ஆடம்பர எஸ்யூவி மற்றும் செடன் கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories : வணிகம் : வணிகம் , #கார் , #விலை , #ஜிஎஸ்டி

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்