முகப்பு > வணிகம்

​புதிதாக களமிறங்கும் Renault Captur கார்: முழு தகவல்கள்..!!

August 30, 2017

​புதிதாக களமிறங்கும் Renault Captur கார்: முழு தகவல்கள்..!!


வெளிநாடுகளில் ரெனால்ட் நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான மாடல்களுள் ஒன்றான Captur கார் இந்தியாவில் விரைவில் அறிமுகமாக உள்ளது.  

மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் Captur, இந்தியாவில் இந்த ஆண்டிற்குள் முறைப்படி அறிமுகப்படுத்தப்படும் என அண்மையில் ரெனால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

உலகளவில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட Captur கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது இதன் வெற்றியை குறிப்பதாக உள்ளது.

கிராஸ்ஓவர் செக்மெண்டில், டஸ்டர் (Duster) மாடலுடன் ஏற்கெனவே வலிமையுடன் விளங்கி வரும் ரெனால்ட் நிறுவனத்திற்கு, அதிக பிரீமியம் அம்சங்களுடன் கூடிய Captur காரின் அறிமுகம் மேலும் வலுசேர்க்கும்.

கிராஸ்ஓவர் மாடல் என்பது எஸ்யூவி மற்றும் ஹேட்ச்பேக் ரக கார்களின் கலவையாகும். 

இனி Captur கார் குறித்த சிறப்புகளை காணலாம்:

டிசைன் அடிப்படையில் ஒப்பிட்டால் ஆகாஜுபாகுவான தோற்றம் கொண்ட டஸ்டரைக் காட்டிலும், கவர்ந்திலுக்கும் ஸ்போர்டி வடிவ தோற்றம் பெற்றிருக்கிறது புதிய Captur.

இதன் முகப்பு, பின்புற விளக்குகள், ஃபாக் லைட்டுகள், பகல் நேர விளக்குகள் மற்றும் வெளிப்புற ரியர் வியூ கண்ணாடிகள் (DRLS) முற்றிலும் எல்.ஈ.டி அடிப்படையிலானது.

இதன் உட்புறம் டூயல் டோன் எனப்படும் இருவண்ண கலவையில் இருக்கும், கருப்பு நிற டேஷ்போர்டு, 7.0 இஞ்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளன.

அதிகமான உட்புற இடவசதி மிகவும் சொகுசான பயணத்தை உறுதிசெய்யும் வகையில் உள்ளது, இருப்பினும் பூட் ஸ்பேஸ் எனப்படும் இதன் சேமிப்பு பகுதி 387 லிட்டர்களே உள்ளது, இது போட்டியாளர்களின் மாடல்களுடன் ஒப்பிடுகையில் குறைவானதாகும்.

ரெனோ கப்டூர் கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு மாடல்களில் கிடைக்கும்.

4 சிலிண்டர்கள் கொண்ட 1598சிசி பெட்ரோல் இஞ்சின், அதிகபட்சமாக 104 PS ஆற்றலையும், 148 Nm டார்க்கையும் அளிக்கிறது, இதில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.

இதேபோல 4 சிலிண்டர்கள் கொண்ட 1461சிசி டீசல் இஞ்சின், இருவகையான ஆற்றல்கள் கொண்ட வேரியண்ட்களாக கிடைக்கும். அதிகபட்சமாக 85 மற்றும் 110 PS ஆற்றலையும், 200 மற்றும் 245 Nm டார்க்கையும் அளிக்கிறது, இதில் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உள்ளது.

வாடிக்கையாளர்கள் 2 மற்றும் 4 வீல் என இரண்டு டிரைவ் ஆப்ஷன்களை தேர்ந்தெடுக்கலாம்.

இவை 10 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்ட சர்வீஸ் நிலையங்களை கொண்டு, ஆட்டோமொபைல் துறையில் வேகமாக வளர்ந்து வரும் சர்வீஸ் நெட்வொர்க் ஆக ரெனால்ட் வளர்ந்துவருவது வாடிக்கையாளர்கள் மத்தியில் அந்நிறுவனத்திற்கு நல்ல பெயரை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories : வணிகம் : வணிகம் , #ரெனால்ட்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்