இன்றைய வானிலை

  • 32 ° C / 90 °F

​நடுத்தர, உயர்தர கார்களுக்கான ஜிஎஸ்டி வரியை உயர்த்த மத்திய அரசு முடிவு..!!

August 30, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
17206 Views

நடுத்தர மற்றும் உயர்தர கார்களுக்கான ஜிஎஸ்டி வரியை உயர்த்துவதற்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ள அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, இதனைத் தெரிவித்தார். 

நடுத்தர மற்றும் உயர் தர கார்களுக்கான ஜிஎஸ்டி வரி தற்போதுள்ள 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

இது குறித்த இறுதி முடிவு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் அருண் ஜெட்லி தெரிவித்தார். 

ஆடம்பரப் பொருட்கள் குறைந்த விலைக்கு விற்கப்படக் கூடாது என்ற நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அருண் ஜெட்லி கூறினார். 

அதேநேரத்தில், மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பொருட்களின் விலை அதிகமாக இருக்கக் கூடாது என்பதிலும் அரசு கவனமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

Categories: வணிகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

நடிகர் சசிகுமாரின் மைத்துனரும், அவரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோவில் கோபுரக் கலசம்

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் காவல்துறையினரின்

தற்போதைய செய்திகள் Nov 22
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 72.06 (லி)
  • டீசல்
    ₹ 61.43 (லி)