இன்றைய வானிலை

  • 27 °C / 80 °F

Popup

Breaking News

Jallikattu Game

​இந்திய பங்குச்சந்தை புதிய உச்சத்தை தொட்டது..!

October 25, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
18742 Views

மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் வர்தகம், வரலாற்றில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

மும்பை பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் தொடங்கியது முதலே ஏறுமகமாகவே இருந்து வந்தது. சென்செக்ஸ் 33,000 புள்ளிகளை முதல் முறையாக கடந்தது. 

மும்பை பங்குச்சந்தையின் தாக்கம் தேசிய பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது, அங்கு வர்த்தகம் 10,295.35 புள்ளிகளை எட்டியது. இதுவும் புதிய உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலையை போக்க பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில் 6.92 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சாலை கட்டுமான திட்டங்களும், பொதுத்துறை வங்கிகளில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் கூடுதலாக ரூ.2.11 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும். அதில், ரூ.1,35,00 லட்சம் கோடி கடன் பத்திரங்கள் மூலமாகவும், ரூ.76,000 லட்சம் கோடி பட்ஜெட் ஒதுக்கீடு மூலமும் அளிக்கப்படும் என்றும் 9 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கான திட்டங்களை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இந்திய மற்றும் மும்பை பங்குச்சந்தைகளில் ஏறுமுகம் கண்டதோடு புதிய உச்சத்தையும் எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 33,042.50 புள்ளிகள், அதாவது 1.33% உயர்ந்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 10,295.35 புள்ளிகள் பெற்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

Categories: வணிகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் மும்பை கிளையில் 11 ஆயிரத்து

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு

அமெரிக்க பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவின் எதிரொலியாக இந்திய பங்குச்

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் அறிமுகங்களில்

ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான பிளிப்கார்ட், மும்பையைச் சேர்ந்த

தற்போதைய செய்திகள் Feb 19
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.74 (லி)
  • டீசல்
    ₹ 65.96 (லி)