இன்றைய வானிலை

  • 32 ° C / 90 °F

​கோதுமை பருப்பு வகைகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தியது மத்திய அரசு..!

October 24, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
7595 Views

கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை 110 ரூபாயும், பருப்பு வகைகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை 200 ரூபாயும் மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் நடைபெற்றது. 

அதில் கோதுமைக்கான குறைந்தபட்ச விலையை குவிண்டாலுக்கு 110 ரூபாய் உயர்த்தி 1,735 ஆக அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

பருப்பு வகைகளின் கொள்முதல் விலையைக் குவிண்டாலுக்கு 200 ரூபாய் உயர்த்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டள்ளது. 

இதேபோல எண்ணெய் வித்துக்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையையும் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

சந்தைக்குத் தடங்கலின்றிப் பொருட்கள் கிடைக்கவும், விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும் ஏதுவாகக் குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்

Categories: வணிகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் அருகே கழுத்து இறுக்கப்பட்ட

நடிகர் சசிகுமாரின் மைத்துனரும், அவரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ்

தற்போதைய செய்திகள் Nov 22
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 72.06 (லி)
  • டீசல்
    ₹ 61.43 (லி)