இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Jallikattu Game

கேரளா கனமழை காரணமாக, கோவையில் வர்த்தகம் முற்றிலும் முடக்கம்!

August 20, 2018 எழுதியவர் : manojb எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
9350 Views

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பு காரணமாக வர்த்தகம் முற்றிலும் முடங்கி உள்ளதால் கோவை மாவட்ட விவசாயிகள், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

கேரளாவில் பெய்த தொடர் மழை காரணமாக பில்லூர் அணை நிரம்பியதால் பவானியாற்றில் திறக்கப்பட்ட உபரி நீரால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால், மேட்டுப்பாளையம், சிறுமுகைகளில் மட்டும் 9 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பல லட்சம் வாழை மரங்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நீரில் மூழ்கின. 

மேலும், அதே நேரத்தில் கேரள வெள்ளப் பாதிப்பு காரணமாக ஓணம் பண்டிகை ரத்து செய்யப்படுவதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. அதனால், மேட்டுப்பாளையத்தில் இருந்து கேரளாவிற்கு தினசரி 300 லாரிகளில்  கொண்டு செல்லப்படும் வாழைத்தார்கள் மற்றும் மலைக்காய்கறிகள் முற்றிலுமாக தடைபட்டுள்ளது. 

ஏற்கனவே, இங்கிருந்து சரக்கு ஏற்றி சென்ற லாரிகள் கேரளாவிற்குள் சிக்கி கொண்டதால் அம்மாநிலத்திற்கான சரக்கு போக்குவரத்து முடங்கியுள்ளது. மேலும், அறுவடை செய்யப்பட்ட மலை காய்கறிகள், வாழைத்தார்கள், பழங்களை வாங்க கேரள வியாபாரிகள் யாரும் வராததால் வர்த்தகம் முடங்கியுள்ளது. இதனால் தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள், வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories: வணிகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

வங்கிக் கடன் மோசடி தொடர்பாக சென்னையில் உள்ள நாதெள்ள சம்பத்

ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த சில மாதங்களில் கடும் சர்ச்சைகளில்

வாஷிங் மெஷின், ரெப்ரிஜிரேட்டர் உள்ளிட்ட பொருட்களின் வரிக்குறைப்பு,

அண்மையில் 80 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்ட

மத்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களால்,

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )