முகப்பு > வணிகம்

ஜி.எஸ்.டி. வரி உயர்வால் விலை உயரும் சினிமா டிக்கெட்கள்!

May 19, 2017

 ஜி.எஸ்.டி. வரி உயர்வால் விலை உயரும் சினிமா டிக்கெட்கள்!


வணிக மால்களுக்கான ஜி.எஸ்.டி. வரி 28 சதவிகிதமாக உயர்த்தப்பட்டத்தை தொடர்ந்து சினிமா டிக்கெட்களுக்கான விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைப்பெற்ற ஜி.எஸ்.டி, மாநாட்டில் பொழுதுபோக்கு மற்றும் வணிக நிறுவனக்களுக்கான வரியை 28 சதவீதமாக உயர்த்தி அருன் ஜேட்லி அறிவித்தார்.

இதனால் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் மற்றும் வணிக மால்களில் இயங்கும் திரையரங்குகளுக்கான சினிமா டிக்கெட் விலை 153 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு வருகின்ற ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏற்கெனவே இணையதளங்களில் திரைப்படங்கள் வெளியாவதால், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சினிமா டிக்கெட்களின் விலையும் உயர்வதால் தியேட்டகளுக்கு சென்று சினிமா பார்க்கும் மக்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. இதனால் மக்கள் இணையதளங்களிலேயே திரைப்படம் பார்க்கும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. 

Categories : வணிகம் : வணிகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்