முகப்பு > வணிகம்

ஏடிஎம்ல் பணம் எடுக்க கட்டணம் குறித்து எஸ்பிஐ விளக்கம்!

May 12, 2017

ஏடிஎம்ல் பணம் எடுக்க கட்டணம் குறித்து எஸ்பிஐ விளக்கம்!


ஒவ்வொரு முறை SBI வங்கி ATM-ல் பணம் எடுக்கும் போதும் 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற உத்தரவால், வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்தனர். ஆனால், இந்த தகவலில் உண்மையில்லை என SBI வங்கி விளக்கமளித்துள்ளது.

ஏடிஎம் சேவைக் கட்டணம் உள்ளிட்டவற்றில் மாற்றங்களுடன் கூடிய புதிய விதிகளை எஸ்பிஐ வங்கி வரும் 1ம் தேதி முதல் அறிமுகம் செய்ய உள்ளதாக நேற்று மாலை தகவல் வெளியானது. அதில் வங்கி  ATM-ல் பணம் எடுக்க 25 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதால், SBI வங்கி வாடிக்கையாளர்கள் கலக்கமடைந்தனர்.

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக எஸ்.பி.ஐ. வங்கி விளக்கமளித்துள்ளது. ATM மூலம் பணம் பெறும் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற செய்தியில் உண்மையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

E-Wallet-ல் இருக்கும் பணத்தை வங்கி ATM மூலம் எடுப்பதற்கு மட்டுமே ரு.25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும், ATM மூலம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கட்டணமின்றி பணம் எடுப்பதற்கான நடைமுறையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை எனவும் ஸ்டேட் வங்கி விளக்கியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்