முகப்பு > வணிகம்

இந்தியாவின் டாக்ஸி சேவை மார்க்கெட்டில் ஆதிக்கம் செலுத்தப்போவது யார்?

October 12, 2017

இந்தியாவின் டாக்ஸி சேவை மார்க்கெட்டில் ஆதிக்கம் செலுத்தப்போவது யார்?


Uber உடனான தொழில் போட்டியை சமாளிக்க, சுமார் 1 பில்லியன் டாலர்கள் மூலதனத்தை ஈர்க்க Ola நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு மும்பையில் பவிஸ் அகர்வால், அன்கிட் ஃபாதி ஆகியோரால் தொடங்கப்பட்ட Ola நிறுவனம் இந்தியாவில் 110-க்கும் மேற்பட்ட நகரங்களில் டாக்ஸி சேவையை வழங்கி வருகிறது. சுமார் 5 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள இந்நிறுவனம் சார்பில் நாடு முழுவதும் 6 லட்சம் டாக்ஸிகளுக்கு மேல் ஓடுகிறது. இதன் மூலம், கிட்டத்தட்ட ரூ.1000 கோடி வருவாய் ஈட்டி வருகிறது.

இந்நிலையில், Uber உடனான தொழில் போட்டியை சமாளிக்க, மேலும் மூலதனத்தை ஈர்க்க Ola நிறுவனம் முடிவு செய்துள்ளது. சீனாவின்  Tencent Holdings மற்றும் ஜப்பானின் SoftBank Group ஆகியவற்றின் மூலம் சுமார் 1 பில்லியன் டாலர் தொகையை முதலீடாக ஈர்க்க Ola முடிவு செய்துள்ளது. மேலும் சில முதலீட்டாளர்களிடம் இருந்து மேலும் 1 பில்லியன் டாலர்களை முதலீடாக ஈர்க்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

சுமார் 12 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்தியாவின் டாக்ஸி மார்க்கெட்டை கைக்குள் கொண்டுவரும் போட்டியின் ஒரு பகுதியாகவே இந்த முதலீட்டு ஈர்ப்பு நிகழ்வதாக கூறப்படும் நிலையில், புதிய மூலதனத்தைக் கொண்டு தனது டாக்ஸி சேவையை மேலும் பல நகரங்களுக்கு அதிகரிப்பதுடன், டாக்ஸி ஓட்டுநர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் Ola திட்டமிட்டுள்ளது.

Categories : வணிகம் : வணிகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்