இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

பெட்ரோல் டீசல் விற்பனை பற்றி ஆர்.டி.ஐ மூலம் வெளியான தகவலால் மக்கள் அதிர்ச்சி

September 1, 2018 எழுதியவர் : manoj எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
36924 Views

இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலை 81 ரூபாய்க்கு விற்பனை செய்யும் எண்ணெய் நிறுவனங்கள், வெளிநாடுகளுக்கு வெறும் 34 ரூபாய்க்கு ஏற்றுமதி செய்து வரும் தகவல் வெளியாகியுள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரோகித் சபர்வால் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் விலை விவரங்களை கேட்டிருந்தார். 

இதற்கு பதில் அளித்துள்ள மங்களூரு பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம், ஒரு லிட்டர் பெட்ரோல் 32 முதல் 34 ரூபாய் வரை ஏற்றுமதி செய்யப்படுவதாக கூறியுள்ளது. ஒரு லிட்டர் டீசல் 34 ரூபாய் முதல் 36 ரூபாய் வரையிலும் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. 

உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில், வெளிநாடுகளுக்கு பாதி விலைக்கும் குறைவாக எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன. மேலும் இந்த தகவல் தொடர்பாக வலைதளவாசிகளும், சமூக ஆர்வலர்களும் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு மீது கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

Categories: வணிகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

வங்கிக் கடன் மோசடி தொடர்பாக சென்னையில் உள்ள நாதெள்ள சம்பத்

ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த சில மாதங்களில் கடும் சர்ச்சைகளில்

வாஷிங் மெஷின், ரெப்ரிஜிரேட்டர் உள்ளிட்ட பொருட்களின் வரிக்குறைப்பு,

அண்மையில் 80 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்ட

மத்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களால்,

தற்போதைய செய்திகள் Oct 22
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )