முகப்பு > வணிகம்

பெட்ரோல்-டீசல் தினசரி விலை நிர்ணய முறை இன்று முதல் அமலுக்கு வந்தது!

May 01, 2017

பெட்ரோல்-டீசல் தினசரி விலை நிர்ணய முறை இன்று முதல் அமலுக்கு வந்தது!


பெட்ரோல்-டீசல் தினசரி விலை நிர்ணய முறை புதுச்சேரியில் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது.

சர்வதேச கச்சா எரிபொருள் சந்தை விலைக்கு ஏற்ப நாள்தோறும் பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை சோதனை அடிப்படையில் புதுச்சேரி உள்பட 5 நகரங்களில் இன்று முதல் அறிமுகம் செய்யப்படும் என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்தது. 

அதன்படி புதுச்சேரியில் நாள்தோறும் பெட்ரோல்-டீசல் விலை நள்ளிரவு 12 மணிக்கு மாறும். அன்றைய விலையை பெட்ரோலிய நிறுவனங்கள் நாள்தோறும் புதிதாக அறிவிக்கும். 

அதன்படி ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவன பங்குகளில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 66 ரூபாய் 05 காசுகள் எனவும், டீசல் விற்பனை விலை 58 ரூபாய் 70 காசுகள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Categories : வணிகம் : வணிகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்