இன்றைய வானிலை

  • 28 °C / 82 °F

Jallikattu Game

​ரிலையன்ஸ் ஜியோவின் அசுர வளர்ச்சியால் அதளபாதாளத்திற்கு சென்ற ஏர்டெல்!

August 21, 2018 Posted By : arun Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
49479 Views

கடந்த ஜூன் மாத முடிவில் ஏர்டெல் நிறுவனத்தில் புதிதாக இணைந்துள்ள வாடிக்கையாளார்களின் எண்ணிக்கையை விட ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் புதிதாக இணைந்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 9 மடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த மே மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் புதிதாக மொபைல் சேவை பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் குறித்த புள்ளிவிவரத்தை தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான TRAI வெளியிட்டுள்ளது.

அதன்படி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் நாட்டிலேயே அதிக அளவாக 97 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர்.

ஜியோவுக்கு அடுத்தபடியாக ஐடியா செல்லூலர் நிறுவனத்தில் 63 லட்சம் வாடிக்கையாளர்களும், 2.75 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்று வோடவோஃன் நிறுவனம் 3ம் இடத்திலும். 2.44 லட்சம் இணைப்புகள் பெற்ற பிஎஸ்என்எல் 4ம் இடமும் பெற்றுள்ளன.

ஒரு காலத்தில் இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக கோலோய்ச்சிய ஏர்டெல், 10,689 புதிய வாடிக்கையாளர்களை மட்டுமே பெற்று மிகவும் பின் தங்கியுள்ளது. ஜியோ புரட்சியால் ஏர்டெல் நிறுவனம் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வணிக நோக்கர்கள் கருதுவதாக தெரிவித்துள்ளனர்.

மொபைல் இணைப்புகளின் எண்ணிக்கை இந்த காலகட்டத்தில் கணிசமாக உயர்ந்துள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும் 1.55 கோடி புதிய வாடிக்கையாளர்கள் இணைப்பு பெற்றுள்ளனர். மே மாதத்தில் 114.65 கோடியாக இருந்த மொத்த தொலைபேசி பயணர்களின் எண்ணிக்கை ஜூன் மாத இறுதியில் 116.35 கோடியாக அதிகரித்துள்ளது. டாடா மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வேறு நிறுவன இணைப்புகளை பெற்றுள்ளனர்.

பிராட்பேண்ட் பயணர்களின் எண்ணிக்கை 43.2 கோடியில் இருந்து 44.71 கோடியாக உயர்ந்துள்ளது. லேண்ட்லைன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 2.25 கோடியில் இருந்து 2.24 கோடியாக சரிந்துள்ளது.

Categories: வணிகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

வங்கிக் கடன் மோசடி தொடர்பாக சென்னையில் உள்ள நாதெள்ள சம்பத்

ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த சில மாதங்களில் கடும் சர்ச்சைகளில்

வாஷிங் மெஷின், ரெப்ரிஜிரேட்டர் உள்ளிட்ட பொருட்களின் வரிக்குறைப்பு,

அண்மையில் 80 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்ட

மத்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களால்,

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )