இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Breaking News

Jallikattu Game

​ஆகஸ்ட் மாத இருசக்கர வாகன விற்பனையில் எந்த நிறுவனம் நம்பர் 1?

September 6, 2018 Posted By : arun Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
4137 Views

ஒவ்வொரு மாதமும் இருசக்கர வாகனங்களின் விற்பனை குறித்த புள்ளிவிவர அறிக்கையை SIAM அமைப்பு வெளியிட்டு வருகிறது. அதன்படி ஆகஸ்ட் மாதத்திற்கான அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் எந்த நிறுவனம் அதிக விற்பனையை சந்தித்துள்ளது? எந்த நிறுவனம் குறைவான விற்பனையை சந்தித்துள்ளது? எந்த பைக் அதிக விற்பனையாகும் மாடல் போன்ற சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்துள்ளது. இந்த விவரங்களை இத்தொகுப்பில் காணலாம்.

பஜாஜ் ஆட்டோ:

உலகின் 6வது மற்றும் இந்தியாவின் 2வது பெரிய இருசக்கர நிறுவனமான பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்ச மாதாந்திர விற்பனை சாதனையை கடந்த மாதம் படைத்துள்ளது.

கடந்த 2017 ஆகஸ்ட் மாதத்தில் 2,83,861 என்ற எண்ணிக்கையிலான இருசக்கர வாகன விற்பனை, 38 சதவீதம் உயர்ந்து இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் 3,62,923 ஆக அதிகரித்துள்ளது.

அதே போல கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1,71,664 ஆக இருந்த உள்நாட்டு விற்பனை, இந்த ஆண்டின் ஆகஸ்டில் 2,18,437 ஆக அதிகரித்துள்ளது. இது 27 % வளர்ச்சி ஆகும். 

இதே போல கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,12,197 ஆக இருந்த வாகன ஏற்றுமதி, 29% அதிகரித்து 1,44,486 ஆக உயர்ந்துள்ளது.

ராயல் என்ஃபீல்ட்:

நூற்றாண்டுகளை கடந்தும் மக்களின் அபிமானத்தை தாங்கி நிற்கும் ராயல் என்ஃபீல்டின் ஆகஸ்ட் மாத இருசக்கர வாகன விற்பனை 69,377 ஆக இருந்தது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 67,377 ஆக இருந்த விற்பனை எண்ணிக்கையில் இது 2% உயர்வு ஆகும்.

அதே போல கடந்த ஓராண்டில் 3,08,911 ஆக இருந்த உள்நாட்டு விற்பனை, 15% உயர்ந்து 3,54,740 ஆக அதிகரித்துள்ளது.

இதே போல கடந்த ஆண்டு ஆகஸ்டில் 1,105 ஆக இருந்த ஏற்றுமதி, 23% உயர்ந்து 1,363 ஆக அதிகரித்துள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப்:

நாட்டின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனமான ஹீரோ கடந்த ஆண்டின் ஆகஸ்ட் மாத்திற்கும், இந்த ஆண்டின் ஆகஸ்டிற்கும் ஒப்பிடுகையில் வெறும் 1% வளர்ச்சியையே பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டில் 6,78,797 ஆக இருந்த விற்பனை 6,85,047 ஆக அதிகரித்துள்ளது.

ஹீரோவின் பண்டிகைக் கால புதிய அறிமுகங்களான Xtreme 200R, Hero Maestro Edge மற்றும் Duet ஆகிய இருசக்கர வாகனங்கள் வரும் காலத்தின் அந்நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிவிஎஸ் மோட்டார்ஸ்:

தமிழகத்தைச் சேர்ந்த டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவின் 3வது பெரிய வாகன நிறுவனமாக விளங்கி வருகிறது. 

டிவிஎஸ் நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 3,17,563 வாகனங்களை விற்பனை செய்திருந்தது, இந்த ஆகஸ்டில் 3,43,217 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 8 சதவீத வளர்ச்சி ஆகும்.

இதே போல கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் உள்ளூர் விற்பனை 2 சதவீதம் உயர்ந்துள்ளது.

சுசுகி மோட்டார்ஸ்:

ஜப்பானைச் சேர்ந்த சுசுகி மோட்டார்ஸின் இருசக்கர வாகனங்கள் சிறப்பான விற்பனையை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 31 சதவீத வளர்ச்சியை அந்நிறுவனம் சந்தித்துள்ளது.

சுசுகி நிறுவனம் சமீபத்தில் புதிதாக burgman Street என்ற ஸ்கூட்டர் மாடலை  அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்கூட்டரும், Access மாடலும் அந்நிறுவனத்தின் விற்பனையை தீவிரப்படுத்த கைகொடுத்துள்ளது.

burgman Street மாடல் மட்டுமே 55,000 என்ற எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது கவனிக்கத்தக்கது.

 

Categories: வாகனம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் 400சிசி பைக்கான Dominar-ன் விலையை

சென்னை மாதவரத்தில் தனியார் பிளாஸ்டிக் கிடங்கில் நிகழ்ந்த

இந்திய கார் சந்தையை ஒரு காலத்தில் கலக்கிய Hyundai நிறுவனத்தின்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது அனைத்து மாடல் பைக்குகளின்

துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட எஸ்யூவி காரை சினிமாவில்

தற்போதைய செய்திகள் Nov 19
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )