இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

Mahindra Marazzo: சென்னையில் அறிமுகமான புதிய கார் குறித்து அறிந்துகொள்வோம்!

September 5, 2018 எழுதியவர் : arun எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
8272 Views

Mahindra நிறுவனத்தின் மல்டி பர்பஸ் வெஹிகிள் ரகமான புத்தம்புதிய Marazzo கார் சென்னையில் சமீபத்தில் அறிமுகம் ஆகியுள்ளது. இந்தக் காரின் விலை, சிறப்பு அம்சங்கள் குறித்த தகவல்களை இத்தொகுப்பில் காணலாம்.

இந்த ஆண்டின் அறிமுகங்களிலேயே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திரா நிறுவனத்தின் புத்தம்புதிய Marazzo கார்  அறிமுகமாகியுள்ளது. இது டொயோட்டா இன்னோவா க்ரெஸ்டா மற்றும் மாருதி எர்டிகா கார்களுக்கு போட்டியாக களமிறங்கியுள்ள MPV (Multi purpose Vehicle) மாடலாகும்.

புதிய Marazzo காரானது உலகப்புகழ்பெற்ற இத்தாலிய கார் டிசைன் நிறுவனமான Pininfarina-விற்கும், மஹிந்திரா நிறுவனத்திற்கும் இடையிலான கூட்டணியில், சென்னையில் உள்ள மஹிந்திரா டிசைன் மையத்தில் உருவாக்கப்பட்டது என்பது சென்னைவாசிகளுக்கு பெருமையளிக்கும் விஷயமாகும்.  

சுறா (Shark) மீனை அடிப்படையாகக் கொண்ட டிசைனில் உருவாக்கப்பட்டுள்ள இக்கார் First-in-class எனப்படும் செக்மெண்டிலேயே முதல் முறையான சிறப்புகளுடன் 4 வேரியண்டுகளில், 7 சீட்டர்கள் மற்றும் 8 சீட்டர்கள் என இரண்டு வகைகளில் வெளியாகியுள்ளது.

வெளிப்புற சிறப்பம்சங்கள்:

Mahindra Marazzo கார் சுறா மீன் போன்ற தோற்றத்தில் ஸ்டைலான மற்றும் ஏரோடைனமிக் வடிவமைப்புடனும் வெளிவந்துள்ளது. 

புதிய Marazzo காரானது ஆகாஜூபாகுவான அகன்ற தோற்றத்தில், முன்புறம் பகல் நேரத்தில் எரியும் LED விளக்குகளுடன் கூடிய பெரிய இரட்டை பேரல் புரெஜெக்டர் ஹெட்லைட்டுகள், அழகுற வடிவமைக்கப்பட்ட ஃபாக் (Fog) விளக்குகள், 17 இஞ்ச் அலாய் வீல்கள், ஷார்க் வடிவ பின்புற விளக்குகள், எலக்ட்ரானிக் கண்ட்ரோல்டு வெளிப்புற ரியர் வியூ கண்ணாடிகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

உட்புற சிறப்பம்சங்கள்:

கேபின் டிசைன் மிகவும் உயர்தரத்தில் வடிவமைப்பு பெற்றுள்ளது, பிரீமியம் ரக வேலைப்பாடுகள் நிறைந்ததாக காணப்படுகிறது. கருப்பு - வெள்ளை வண்ணக் கலவையில் டேஷ்போர்ட் கண்ணைக் கவரும் வகையில் அமைந்துள்ளது.

இந்தக் காரில் 7 அங்குல டச்-ஸ்கிரீனுடன் கூடிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. இது ஆண்ட்ராய்ட் ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே செயலிகளை சப்போர்ட் செய்கிறது. ரூஃப் மவுண்டட் ஏசி, செண்ட்ரல் லாக்கிங் வசதி, டூயல் ஏர் பேக்ஸ், எலக்ட்ரானிக் முறையில் (EBD) கட்டுப்படுத்தப்படும் ABS பிரேக்கிங் வசதி, மேலும் இதில் அதிவேகத்தில் செல்லும் போது எச்சரிக்கை, பிரேக்கிங் குறித்த தகவல்களை டிரைவருக்கு தனியாக அளிக்கும் வகையில் 4.2 அங்குல திரை கொடுக்கப்பட்டுள்ளது. பவர் விண்டோக்கள், க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேடிக் க்ளைமேட் கண்ட்ரோல் ஏசி, பார்க்கிங் சென்சார்கள், வாலெட்டுகள், மொபைல் போன்கள் வைக்கும் வகையில் கப் ஹோல்டர்கள் ஆகிய வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

இஞ்சின்:

புதிய Mahindra Marazzo எம்பிவி காரானது 1.5 லிட்டர் டீசல் இஞ்சின் கொண்டுள்ளது. இது அதிகபட்சமாக 121 bhp ஆற்றலையும், 300 Nm டார்க்கையும் வழங்கவல்லது. இஞ்சினின் ஆற்றலை 6 வேக மேனுல் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் முன்பக்க வீல்களுக்கு அளிக்கிறது.

ஆட்டோமேடிக் கியர் சிஸ்டம் கொண்ட மாடல் மற்றும் பெட்ரோல் வெர்ஷன் ஆகியவை பின்னர் அறிமுகப்படுத்தப்படும் என்று மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மைலேஜ்:

இக்காரின் ஃபியூல் டேங்க் அளவு 45 லிட்டர்கள் ஆகும். அதிகபட்ச வேகம் 145 கிமீ என்று கூறப்பட்டுள்ளது. ARAi-யால் லிட்டருக்கு 17.8 கிமீ மைலேஜ் தரும் என்று சான்றளிக்கப்பட்டுள்ளது.

இந்திய சாலைகளுக்கான பிரத்யேக வடிவமைப்பெற்றுள்ள இக்காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் இதர மஹிந்திரா நிறுவன மாடல்களைக் காட்டிலும் 200mm அதிகம் என்பதால் கரடுமுரடான சாலைகளுக்கு ஏற்றதாகும். அதே போல இக்காரின் மினிமம் டர்னிங் ரேடியஸ் 5.25 மீட்டராக இருக்கும்.

M2, M4, M6 மற்றும் M8 என 4 வேரியண்டுகளில் இக்கார் கிடைக்கிறது. இக்காரில் உட்புற இடவசதி விசாலமானதாக உள்ளது. இக்காரில் மடங்கி திறக்கும் வகையிலான சீட்கள் கொடுக்கப்பட்டுள்ளதால் பயணிகள் இருக்கைகள் மாற்றியமைக்கப்பட்டு அதிக ஸ்டோரேஜ் வசதி கிடைக்கிறது.

வண்ணங்கள்:

புதிய Mahindra Marazzo கார் 6 வண்ணங்களில் கிடைக்கிறது.

  • Iceberg White
  • Oceanic Black
  • Mariner Maroon,
  • Shimmering Silver
  • Aqua Marine
  • Poseidon Purple
விலை:

புதிய Marazzo கார் ரூ.9.99 லட்சத்திலிருந்து ரூ.13.90 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது. இதன் போட்டியாளர்களான இன்னோவா மற்றும் எர்டிகா மாடல்களுடன் ஒப்பிடும் போது இதன் விலை குறைவாகவே உள்ளது.

இந்திய கார் சந்தையில் இந்த புதிய Mahindra Marazzo MPV ரக கார் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பலாம்.

Categories: வாகனம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

இந்திய கார் சந்தையை ஒரு காலத்தில் கலக்கிய Hyundai நிறுவனத்தின்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது அனைத்து மாடல் பைக்குகளின்

துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட எஸ்யூவி காரை சினிமாவில்

Jupiter ஸ்கூட்டர்களின் விற்பனையை அதிகரிக்கும் வகையில்

எந்த ஒரு வாகனத்திற்கும் எரிபொருள் சேமிப்பு திறன் மிகவும்

தற்போதைய செய்திகள் Oct 22
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )