இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Breaking News

Jallikattu Game

​ஓசையில்லாமல் Duke 390 பைக்குகளுக்கு ரீகால் அறிவிப்பை வெளியிட்ட KTM நிறுவனம்!

August 5, 2018 Posted By : arun Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1827 Views

2017 மற்றும் 2018 ஆண்டுகளில் விற்பனை செய்யப்பட்ட Duke 390 மாடல் பைக்குகளுக்கு KTM நிறுவனம் ரீகால் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

KTM India நிறுவனம் ஓசையில்லாமல் Duke 390 மாடல் பைக்குகளுக்கான ரீகால் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி 2017 மற்றும் 18 மாடல் பைக்குகளை நாடுமுழுவதும் திரும்பப்பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் பைக்குகளுக்கான மழைக்கால கிட் ஒன்று நிறுவப்பட்ட உள்ளது, மேலும் சில உதிரிபாகங்களும் மாற்றித்தரப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வாடிக்கையாளர்களால் தொடர்ச்சியாக குறிப்பிடப்பட்ட கோளாறுகள் இந்த ரீகால் நடவடிக்கை மூலம் சரிசெய்து தரப்பட உள்ளது. புதிதாக நிறுவப்பட உள்ள மழைக்கால கிட்டில் புதிய ECU bracket, பின் சீட் உயரம் அதிகரிப்பு, முகப்பு விளக்கு அதிர்வு தடுப்பு போன்றவை சரிசெய்துதரப்பட உள்ளது. இவை அனைத்துமே நாடுமுழுவதும் உள்ள டீலர்ஷிப்புகள் மூலமாக இலவசமாக மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல முகப்பு விளக்கு தானாக ஆன்/ஆஃப் ஆகும் பிரச்சனை இருந்து வந்தது, இதனை சரிசெய்யும் விதமாக மென்பொருள் அப்டேட் செய்யப்பட உள்ளது.

புதிய  ECU bracket மழை மற்றும் தூசி ஆகியவற்றில் இருந்து காக்கும் வகையில் பாதுகாக்கப்பட்டுள்ளது. முன்பு பின் சீட்டில் எடை அதிகரிக்கும் போது அது, பின்புற விளக்கை சேதப்படுத்திவிடுவதாக இருந்தது, தற்போது சீட் மற்றும் டெயில் லைட் ஆகியவற்றிற்கிடையேயான வித்தியாசம் அதிகரிக்கப்படுவதன் மூலம் அப்பிரச்சினை சரிசெய்யப்படுகிறது.

Duke 390  பைக்கில் ஒற்றை சிலிண்டர் கொண்ட லிக்விட் கூல்டு 373cc இஞ்சின் இடம்பெற்றுள்ளது, இது அதிகபட்சமாக 44 bhp ஆற்றலையும், 37 Nm டார்க்கையும் வழங்கவல்லதாகும். இதில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது.

ஏபிஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரைடு பை வயர் போன்ற சமீபத்திய தொழில்நுட்பங்கள் அடங்கிய இந்த பைக் 2.49 லட்ச ரூபாய் விலையில் கிடைக்கிறது.

Categories: வாகனம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் 400சிசி பைக்கான Dominar-ன் விலையை

சென்னை மாதவரத்தில் தனியார் பிளாஸ்டிக் கிடங்கில் நிகழ்ந்த

இந்திய கார் சந்தையை ஒரு காலத்தில் கலக்கிய Hyundai நிறுவனத்தின்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது அனைத்து மாடல் பைக்குகளின்

துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட எஸ்யூவி காரை சினிமாவில்

தற்போதைய செய்திகள் Nov 19
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )