இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​வெள்ள பாதிப்பில் இருந்து உங்கள் காரை பாதுகாக்கும் புதிய கண்டுபிடிப்பு!

August 27, 2018 எழுதியவர் : arun எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
4093 Views

https://www.motor1.com/news/263562/flood-guard-car-bag/அண்மையில் கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை நாம் எளிதில் மறந்திருக்க வாய்ப்பில்லை.. வரலாற்றிலேயே மோசமான வெள்ள பாதிப்பை அம்மாநிலம் சந்தித்துள்ளது. இதில் சுமார் 370க்கும் மேற்பட்டோர் பலியானதுடன், வீடுகளை இழந்து ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

வீடு, கட்டுமான சேதம், பொருளாதார இழப்பு என எல்லாவற்றையும் கடந்து மிகவும் முக்கியமான ஒன்றாக வாகனங்கள் நீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டும், பயன்படுத்த முடியாத வகையில் பாழடைந்து வீணாகியுள்ளது. இதனால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதித்துள்ளனர்.கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய ஆயிரக்கணக்கான வாகனங்கள் இதே போல பாழாகியுள்ளது. கேரளாவில் மட்டுமல்ல கடந்த 2015ல் சென்னை நகரில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி இதே போல ஆயிரக்கணக்கான வாகனங்கள் நாசமாகியதையும் நாம் கண்கூடாக கண்டிருக்கிறோம்.

இது போல வெள்ள பாதிப்பில் கார்கள் சிக்காமல் இருக்க பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளனர். ஆசிய கண்டத்திலேயே வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடாக பிலிப்பைன்ஸ் விளங்குகிறது. நமக்கு வெள்ளம் என்பது எப்போதாவது நடக்கும் ஒரு விஷயம் என்றால் அந்நாட்டில் அது வாடிக்கையான ஒரு இயற்கை சீற்றமாக உள்ளது. இதற்கு தீர்வு காணும் நோக்கிலேயே இந்த புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸைச் சேர்ந்த Paul Dela Fuente என்பவர் ‘The Flood Guard car bag’ என்ற ஒன்றை கண்டறிந்துள்ளார். இது ஒரு முழு காரையும் மூடிவிடும் ஒரு பிளாஸ்டிக் பை போன்றது.இந்த Flood Guard car bag-ஐ கீழே விரித்து காரினை அதன் மேல் ஓட்டிச் செல்ல வேண்டும், பின்னர் ஜிப்களை பயன்படுத்தி காரை மூடிவிடவேண்டும். இந்த முறையில் கார் வெள்ள நீர் காருக்குள் உட்புகாமல் முழுமையாக பாதுகாக்கப்படுகிறது. இதன் பக்கவாட்டில் கயிறுகள் கொடுக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லாமல் இந்த கயிறுகளை அருகிலிருக்கும் தூண், மரம் ஆகியவற்றில் கட்டிவிடலாம்.

Flood Guard car bag-கள் Medium மற்றும் Large என இரண்டு அளவுகளில் கிடைக்கிறது. இது காம்பாக்ட் செசன், எஸ்யூவிக்கள் முதல் சிறிய ரக பிக் அப் டிரக்குகள் வரை பயன்படுத்த ஏற்றதாக உள்ளது.

இரண்டு அளவுகளுமே 250 அமெரிக்க டாலர்கள் என்ற விலையில் கிடைக்கிறது. இந்திய மதிப்பில் இதன் மதிப்பு சுமார் 17,500 ரூபாய் இருக்கலாம் என தெரிகிறது. வெள்ள பாதிப்பு உள்ள பகுதிகளில் இந்த தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக அமையலாம். இது தொடர்பாக மேலும் தகவல்களை கீழ்கண்ட இணையதளத்தில் அறியலாம்.  https://www.motor1.com/news/263562/flood-guard-car-bag/

Categories: வாகனம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஷோரூம்களுக்கு சென்று புதிய கார்கள் வாங்குவது வாடிக்கையான

பல ஆண்டுகளாக டிரைவர் இல்லாத கார் குறித்த செய்திகளை நாம்

ஒவ்வொரு மாதமும் இருசக்கர வாகனங்களின் விற்பனை குறித்த

Mahindra நிறுவனத்தின் மல்டி பர்பஸ் வெஹிகிள் ரகமான புத்தம்புதிய

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )