இன்றைய வானிலை

  • 28 °C / 82 °F

Jallikattu Game

​7 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளிகளுக்கு 2 மாதங்களுக்குள் மரண தண்டனை அளித்தது நீதிமன்றம்!

August 21, 2018 Posted By : arun Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
7141 Views

மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய 7 வயது குழந்தை கூட்டு பாலியல் வன்புணர்வு வழக்கில், விசாரணை முடிந்து குற்றவாளிகளுக்கு இரண்டு மாதங்களுக்குள் மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சர் நகரில் உள்ள பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுமி ஒருவர் கடந்த ஜூன் மாதத்தில் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கழுத்து அறுபட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். 

பள்ளி முடிந்து மாலைவேளையில் பெற்றோர்களுக்காக பள்ளியின் வாயிலில் காத்துக்கொண்டிருந்த அந்த மாணவியை அடையாளம் தெரியாத நபர்கள், கடத்திச் சென்று 2 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த புதருக்குள் வைத்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததோடு கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தனர். அடுத்த நாள் காலையில் அந்த வழியாக சென்ற ஒருவர் குழந்தை அலங்கோலமான நிலையில் கொலை செய்யப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

இந்த பாலியல் வன்புணர்வு விவகாரம் அந்நகர மக்களை கடுமையாக மனதளவில் பாதித்தது. இச்சம்பவத்திற்கு நியாயம் கேட்டு அவர்கள் வீதியில் போராடினர். மண்ட்சர் நகரில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்த செய்தியறிந்த பலர் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டார்.

பள்ளியின் அருகில் இருந்த கடை ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி வீடியோ காட்சிகளை ஆய்வு செய்த போது அம்மாணவியை இருவர் அழைத்துச் செல்வதைக் கண்டனர். பின்னர் தீவிர விசாரணையின் முடிவில் அவர்கள் இர்ஃபான் (வயது 20), மற்றும் ஆசிஃப் (வயது 24) என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரும் சேர்ந்து அச்சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கழுத்தை அறுத்து கொலையும் செய்ததாக தெரியவந்தது.

இந்த வழக்கு அங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வாதங்கள் நிறைவடைந்த நிலையில் குற்றம் நிரூபணம் ஆனதாக நீதிபதி நிஷா குப்தா அறிவித்தார். இருவருக்கும் மரண தண்டனை விதித்தார்.

இந்த வழக்கை விசாரித்து, விரைவாக தீர்ப்பு அளிக்கும் விதமாக மாநில அரசு விரைவு நீதிமன்றம் அமைத்தது. இது போன்ற வழக்குகளில் விரைவாக தீர்ப்பு அளிக்கும் விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ராவிற்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

Categories: குற்றம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருவண்ணாமலை அருகே சொத்துக்காக பெற்ற தாய் மீது கொலைவெறித்

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

போச்சம்பள்ளி அருகே கிணறு சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே இளைஞர் ஒருவரை கொலை

கிருஷ்ணகிரியை சேர்ந்த காதல் ஜோடி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )