இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Breaking News

Jallikattu Game

காவல்துறை அதிகாரிகளை மிரட்டிய புல்லட் நாகராஜ் அதிரடியாக கைது!

September 10, 2018 Posted By : nandhakumar Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2801 Views

காவல்துறை அதிகாரிகளை மிரட்டிய புல்லட் நாகராஜ் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

கடந்த 6-ஆம் தேதியன்று புல்லட் நாகராஜ், மதுரை சிறைத்துறை எஸ்.பி., ஊர்மிளாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஆடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த ஆடியோ பதிவு காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே தொடர்ந்து, இரண்டு நாள் இடைவெளியில், தற்போது, 14 ஆடியோக்களுடன் தனது சமீபத்திய புகைப்படத்தையும் வெளியிட்டு தம்மை முடிந்தால் கைது செய்யுமாறு காவல்துறைக்கு புல்லட் நாகராஜ் சவால் விடுத்தார்.

இதனையடுத்து புல்லட் நாகராஜை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் தேனி மாவட்டம் பெரிய குளத்திற்கு புல்லட் நாகராஜன் சென்று கொண்டிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

உடனே டிஎஸ்பி ஆறுமுகம் தலைமையிலான காவல்துறையினர் புல்லட் நாகராஜை துரத்தி பிடித்து கைது செய்துள்ளனர். அவரை தென்கரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே புல்லட் நாகராஜிடம் இருந்து சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளும் 2 கத்தி மற்றும் துப்பாக்கி போன்ற ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போலி வருவாய்துறை ஆவணங்கள், முத்திரைகள் மற்றும் நீதிமன்ற முத்திரைகளும் புல்லட் நாகராஜிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.

இந்நிலையில், புல்லட் நாகராஜனை மேல்மங்களத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், வீடு முழுவதும் அங்குலம், அங்குலமாக சோதனையிட்டனர். பாஸ்போர்ட் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய போலீஸார், பெரியகுளம் தென்கரை காவல்நிலையத்தில் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Categories: குற்றம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருவண்ணாமலை அருகே சொத்துக்காக பெற்ற தாய் மீது கொலைவெறித்

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

போச்சம்பள்ளி அருகே கிணறு சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட

வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே, கணவனை கொலை செய்த மனைவி

தற்போதைய செய்திகள் Nov 19
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )