இன்றைய வானிலை

  • 27 °C / 81 °F

Jallikattu Game

அமைச்சரால் உயிருக்கு ஆபத்து உள்ளதாக காதல் ஜோடி புகார்!

November 8, 2018 Posted By : shanmugapriya Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1965 Views

ஒசூரில் சாதி மறுப்பு திருமணம் செய்துக்கொண்ட காதல் ஜோடியினர், தங்கள் உயிருக்கு அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியால் ஆபத்துள்ளதாக கூறி, வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஓசூர் அடுத்த B.தாசரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த இரு வேறு சமூகத்தை சேர்ந்த ஆனந்த், பவித்ரா ஆகியோர் காதலித்து வந்தனர். இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், இருவரும் கடந்த மாதம் 31ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துக்கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த பவித்ராவின் உறவினர்கள் ஆனந்தின் நண்பர்களை காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று தாக்கி வருவதாகவும், இதற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி உடந்தையாக உள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. 

இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஆனந்த்-பவித்ரா தம்பதியினர், தங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு நாகராஜ் என்பவரும், அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியுமே காரணம் என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர். 

Categories: குற்றம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருவண்ணாமலை அருகே சொத்துக்காக பெற்ற தாய் மீது கொலைவெறித்

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

போச்சம்பள்ளி அருகே கிணறு சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட

சென்னையில் மண்னெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்வதாக

செய்யாறு அருகே பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )