இன்றைய வானிலை

  • 27 °C / 81 °F

Jallikattu Game

​சொத்துக்காக பெற்ற தாய் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய மகன்!

August 4, 2018 Posted By : shanmugapriya Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2671 Views

திருவண்ணாமலை அருகே சொத்துக்காக பெற்ற தாய் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய மகனை போலீசார் தேடிவருகின்றனர். 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த தேவானந்தல் கொல்ல கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தம்மான். அவர் தனது சொத்துக்களை பிள்ளைகள் மூன்று பேருக்கு பிரித்துக்கொடுப்பதில் தகராறு இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று கோவிந்தம்மாளுக்கும் அவரது மகன் தாமோதரனுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி தனது தாய் என்றும் பாராமல் கோவிந்தம்மாளை தாமோதரன் தாக்கியுள்ளார். 

இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த கோவிந்தம்மாளை உறவினர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவான தாமோதரனைத் தேடி வருகின்றனர். 


 

Categories: குற்றம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருவண்ணாமலை அருகே சொத்துக்காக பெற்ற தாய் மீது கொலைவெறித்

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

போச்சம்பள்ளி அருகே கிணறு சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட

சென்னையில் மண்னெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்வதாக

செய்யாறு அருகே பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )