இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​செல்போன் பறித்துவிட்டு தப்பியோடிய இளைஞர் லாரியில் சிக்கி உயிரிழப்பு!

September 22, 2018 Posted By : shanmugapriya Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2187 Views

சென்னை மாதவரத்தில், செல்போன் பறித்து விட்டு இளைஞர்கள் தப்பியோடிய போது லாரியில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். ஆத்திரமடைந்த நண்பர்கள், லாரி ஓட்டுநரை அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

அம்பத்தூர் பெரியார் நகரைச் சேர்ந்த ராகவன் என்பவர் மணலியில் செல்போன் பேசிக் கொண்டே வீடு திரும்பிக்கொண்டிந்தார். அப்போது, அவரது கையில் இருந்த செல்போனை புழல் பகுதியை சேர்ந்த மணி, சுகுமார், வினோத் ஆகிய 3 பேர் பறித்துக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் தப்பியோட முயன்றனர். எதிர்பாராத விதமாக அவர்கள் மீது, அந்த வழியே வந்த லாரி மோதியது. இதில், சுகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால், ஆத்திரமடைந்த நண்பர்கள் லாரி ஓட்டுநர் மணியை சரமாரியாக தாக்கினர். 

இதில், லாரி ஓட்டுநர் மணிக்கு கழுத்துப் பகுதியில் வெட்டு விழுந்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஓட்டுநர் மணியை ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துக்கொண்டு சென்ற போது பாதி வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதனிடையே, செல்போன் பறிப்பில் ஈடுபட்ட மணி, வினோத் ஆகியோரைக் கைது செய்த போலீசார், 18 வயது பூர்த்தி அடையாததால் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர். 

Categories: குற்றம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருவண்ணாமலை அருகே சொத்துக்காக பெற்ற தாய் மீது கொலைவெறித்

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

போச்சம்பள்ளி அருகே கிணறு சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே இளைஞர் ஒருவரை கொலை

கிருஷ்ணகிரியை சேர்ந்த காதல் ஜோடி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )