இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​சென்னை வங்கி அதிகாரி வீட்டில் நிகழ்ந்த கொள்ளையில் அம்பலமான அதிர்ச்சித் தகவல்கள்!

September 11, 2018 எழுதியவர் : shanmugapriya எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
14184 Views

சென்னையில் வங்கி அதிகாரி குடும்பத்தினரைக் கட்டிப்போட்டு 227 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தை அந்த வீட்டில் வேலை பார்த்த பெண்ணே திட்டமிட்டு அரங்கேற்றியது அம்பலமாகியுள்ளது. 

வீட்டிலிருந்த 2 நாய்களை இந்த கொள்ளைச் சம்பவத்தை நிகழ்த்துவதற்காக  முன்கூட்டியே திட்டமிட்டு அந்த பெண் கொன்றதும் தெரிய வந்துள்ளது. சென்னை பல்லாவரத்தையடுத்த   கார்டன் உட்ரோப் நகரில் வசித்து 
வருபவர் யோகசேரன். இவர் தி நகரில் உள்ள தனியார் வங்கியில் மேலாளாராக 
பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் 5 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்து அந்த வீட்டில் புகுந்து யோகசேரன், அவரது மனைவி சுப்புலட்சுமி மற்றும் வேலையாள் மகாராணி ஆகியோரை கட்டிபோட்டு விட்டு வீட்டிலிருந்த 227 சவரன் நகைகளை அள்ளிச் சென்றனர். 

இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களில் ஒருவன் நகைகளை சட்டைப் பைக்குள் திணித்தவாறே வங்கி மேலாளரின் வீட்டிலிருந்து தப்பியோடும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. இந்த துணிகர கொள்ளை சம்பவம் தொடர்பாக 6 தனிப்படைகளை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  சிசிடிவி காட்சிகளை வைத்து அவர்கள் நடத்தி விசாரணையில்  பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியானது. கொள்ளையர்களால் கட்டிப்போடப்பட்டது போல் நடித்த வேலைக்காரப் பெண் மகாராணியே இந்த கொள்ளை திட்டத்தின் மூளையாக செயல்பட்டது அப்போது அம்பலமானது. 
 
50 வயதான அந்த பெண் இரண்டு வருடங்களுக்கு முன் மதுரையிலிருந்து வீட்டு வேலைக்காக யோகசேரன் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். வீட்டிலிருந்த பணம், நகைகளை நீண்ட காலமாக நோட்டம் விட்ட மகாராணி ஒரு மாதத்திற்கு முன்னதாக கொள்ளை திட்டத்தை அரங்கேற்ற ஆயத்தமானார். யோகசேரன் வீட்டிலிருந்த 2 நாய்கள் தனது திட்டத்திற்கு இடையூறாக இருக்கும் என நினைத்த மகாராணி ஒவ்வொன்றாக 2 நாய்களையும் விஷம் வைத்துக்கொன்றார். பின்னர் மதுரையிலிருந்து 5 இளைஞர்களை வரவழைத்த மகாராணி,  யோகசேரன் வீட்டின் அருகிலேயே அவர்களை தங்கவைத்து கொள்ளையடிக்க தருணம் பார்த்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

மகாராணியின் சைகை கிடைத்ததும் நேற்று முன் தினம் மாலை அந்த 5 இளைஞர்களும் வங்கி மேலாளர் யோகசேரன் வீட்டில் புகுந்து 227 சவரன் நகைகளை கொள்ளையடித்துள்ளனர். அவர்கள் நகைகளுடன், மதுரை, கோயமுத்தூர் பகுதிகளில் தலைமறைவாகியிருப்பதாக மகாராணி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன

Categories: குற்றம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருவண்ணாமலை அருகே சொத்துக்காக பெற்ற தாய் மீது கொலைவெறித்

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

போச்சம்பள்ளி அருகே கிணறு சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட

மணப்பாறை அருகே பள்ளி மாணவியை வன்புணர்வு செய்து கர்ப்பமாக்கிய

முத்தம் கொடுத்த போது கணவரின் நாக்கை கர்ப்பிணி மனைவி துண்டாகக்

தற்போதைய செய்திகள் Sep 26
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )