இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Breaking News

Jallikattu Game

​நிச்சயித்த மாப்பிள்ளை மீது வரதட்சணை புகார் அளித்த பெண் உதவி ஆய்வாளர்!

September 11, 2018 Posted By : shanmugapriya Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
8664 Views

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நிச்சயித்த மாப்பிள்ளை மீது பெண் உதவி ஆய்வாளர் வரதட்சணை புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சூரியகலா. இவருக்கும், மணப்பாறையில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வரும் சாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் என்பவருக்கும் ஜூலை 5ம் தேதி திண்டுக்கல்லில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வரும் செப்டம்பர் 12ம் தேதி மணப்பாறையில் திருமணம் நடைபெற இருந்தது. இதற்கிடையே பெண்ணிற்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டதாகவும், அதனை மறைக்க 15 லட்சம் ரூபாய் வரதட்சனையாக அளிக்க வேண்டும் என மாப்பிள்ளை வீட்டார் கேட்டதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் கேட்ட வரதட்சனையை அளிக்காததால் மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சூரியகலா அளித்த புகாரின் பேரில் அருண்குமார், அவரது தாயார், சகோதரி, மாமா ஆகியோர் மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அருண்குமாரும், சூரியகலா தனது நோயை மறைத்து திருமணம் செய்ய முயற்சிப்பதாகவும் புகார் அளித்துள்ளார். 

Categories: குற்றம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருவண்ணாமலை அருகே சொத்துக்காக பெற்ற தாய் மீது கொலைவெறித்

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

போச்சம்பள்ளி அருகே கிணறு சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட

வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே, கணவனை கொலை செய்த மனைவி

தற்போதைய செய்திகள் Nov 19
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )