இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Breaking News

Jallikattu Game

பிரபல நகைகடையில் அரைகிலோ நகைகளை திருடி சென்ற ஊழியர் கைது!

September 10, 2018 Posted By : nandhakumar Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1923 Views

சென்னையில் உள்ள பிரபல நகைகடையில் அரைகிலோ நகைகளை திருடி சென்ற ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை அண்ணாநகரில் என்ஏசி ஜூவல்லரியில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு ரபீக் என்பவர் வேலைக்கு சேர்ந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வேலைக்கு வந்த முகமது ரபீக்கை மதியத்திற்கு மேல் திடீரென  காணவில்லை. அவரை தொடர்பு கொண்டால் போன் சுவிட்ச் ஆப்  செய்யப்பட்டிருந்தது. அதனால், சந்தேகமடைந்த கடையின் மேலாளர் சோதனை செய்த போது அரைகிலோ நகை திருடப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து அண்ணாநகர் போலீசாரிடம் நகைக் கடை சார்பில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார், நகையுடன் தலைமறைவான முகமது ரபிக்கை தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவான முகமது ரபீக்கை திண்டுக்கல்லில் அண்ணாநகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில் குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவரை சென்னை அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர். 

Categories: குற்றம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருவண்ணாமலை அருகே சொத்துக்காக பெற்ற தாய் மீது கொலைவெறித்

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

போச்சம்பள்ளி அருகே கிணறு சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட

வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே, கணவனை கொலை செய்த மனைவி

தற்போதைய செய்திகள் Nov 19
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )