இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​விடைத்தாள் மறுமதிப்பீட்டு முறைகேடு வழக்கு : லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

August 10, 2018 எழுதியவர் : shanmugapriya எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
668 Views

விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு வழக்கில், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் உதவி பேராசிரியரின் முன்ஜாமின் மனுவுக்கு 14-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீட்டில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் உமா, தனியார் கல்லூரி உதவி பேராசிரியர் அன்புச்செல்வன் உள்ளிட்ட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதில் முன் ஜாமின் கோரி உமா மற்றும் அன்புச்செல்வன் ஆகியோர் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது பேராசிரியை உமா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், லஞ்ச ஒழிப்புத்துறை முறையான விசாரணை நடத்தாமல் வழக்குப்பதிவு செய்துள்ளதாக பேராசிரியை உமா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மறுமதிப்பீடு பணிகளில் கலந்து கொள்ளாத நிலையில் தன் மீதும் பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டதாக அன்புச்செல்வன் தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, மனுவுக்கு ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்குள் பதிலளிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டார். 

Categories: குற்றம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருவண்ணாமலை அருகே சொத்துக்காக பெற்ற தாய் மீது கொலைவெறித்

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

போச்சம்பள்ளி அருகே கிணறு சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட

சென்னையில் காங்கிரஸ் பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட

ஆத்தூர் அருகே தாயின் கண் எதிரே 13 வயது சிறுமியை அரிவாளால்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )