இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

கோயில் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் ரூ.80 லட்சத்திற்கு விற்று மோசடி!

October 10, 2018 Posted By : wasim Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2942 Views

சென்னையில் கோயில் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் 80 லட்சம் ரூபாய்க்கு விற்று மோசடி செய்ததாக, சினிமா இயக்குனர் உட்பட 2 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை பழவந்தாங்கல் பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர், பல்லாவரம் அருகேயுள்ள நெமிலிச்சேரியில் இரண்டரை கிரவுண்ட் நிலத்தை வாங்க முயற்சி செய்துள்ளார். அவரிடம் பொது அதிகார முகவராக அறிமுகப்படுத்திக் கொண்ட சினிமா இயக்குனர்  வி.எஸ்.பழனிவேல், அந்த இடத்திற்காக 80 லட்சம் ரூபாயை, வங்கிக் கணக்கு மூலம் பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில், பத்திரப்பதிவு செய்து தராத நிலையில், அந்த இடத்தின் பட்டா குறித்து பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில், ஆய்வு செய்தபோது, அந்த நிலம் அகத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமானது, என தெரியவந்தது.

இதையடுத்து  கோயில் நிலத்தை ஏமாற்றி, தனக்கு விற்பனை செய்த இயக்குனரும், படத் தயாரிப்பாளருமான பழனிவேல், கிருஷ்ணன், மற்றும் போலி ஆவணங்களை தயாரிக்க உதவியாக இருந்த, ரவி , நந்தகோபால் உள்ளிட்ட 5 பேர் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவில் கிருஷ்ணகுமார் புகார் அளித்தார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார்,  இயக்குனர் பழனிவேல் மற்றும் நந்தகோபாலை கைது புழல் சிறையில் அடைத்தனர். மேலும் மூவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். கைதான சினிமா பட இயக்குனர் பழனிவேல், நடிகை சோனியா அகர்வால் நடித்த "சாயா" படத்தை இயக்கி தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories: குற்றம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருவண்ணாமலை அருகே சொத்துக்காக பெற்ற தாய் மீது கொலைவெறித்

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

போச்சம்பள்ளி அருகே கிணறு சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே இளைஞர் ஒருவரை கொலை

கிருஷ்ணகிரியை சேர்ந்த காதல் ஜோடி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )