இன்றைய வானிலை

  • 27 °C / 81 °F

Jallikattu Game

​3 வயது சிறுமியின் வாயில் அணுகுண்டு வைத்த இளைஞர்!

November 8, 2018 Posted By : shanmugapriya Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
6250 Views

3 வயது சிறுமியின் வாயில், இளைஞர் ஒருவர் அணுகுண்டு வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ பகுதியை சேர்ந்த இளைஞர் ஹர்பால் என்பவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடித்து வந்துள்ளார். அப்பொழுது, அருகில் விளையாடிக்கொண்டிருந்த 3 வயது சிறுமியின் வாயில் அணுகுண்டை வைத்து வெடிக்கச்செய்துள்ளார்.

வெடி வெடித்ததில் சிறுமியின் வாயில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அணுகுண்டு வெடித்ததால் வாயில் பலத்த காயம் ஏற்பட்ட சிறுமியின் உடல்நிலை இக்கட்டான நிலையில் இருப்பதாகவும், 50 தையல்கள் போட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இளைஞர் மீது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.

Categories: குற்றம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருவண்ணாமலை அருகே சொத்துக்காக பெற்ற தாய் மீது கொலைவெறித்

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

போச்சம்பள்ளி அருகே கிணறு சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட

சென்னையில் மண்னெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்வதாக

செய்யாறு அருகே பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )