​25 லட்ச ரூபாய்க்கு பிளான் போட்டு 5 ரூபாயை கொள்ளையடித்து சிக்கிய திருட்டு கும்பல்! | They expected to rob Rs 25-30 lakh, ended up with just Rs 5 and in jail | News7 Tamil

இன்றைய வானிலை

  • 32 °C / 90 °F

Breaking News

Jallikattu Game

​25 லட்ச ரூபாய்க்கு பிளான் போட்டு 5 ரூபாயை கொள்ளையடித்து சிக்கிய திருட்டு கும்பல்!

August 10, 2018 எழுதியவர் : arun எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2009 Views

தொழிலதிபர் ஒருவரிடமிருந்து 5 ரூபாயை திட்டம் தீட்டி கொள்ளையடித்த கும்பல் ஒன்று காவல்துறையிடம் சிக்கிய சுவாரஸ்ய சம்பவம்  டெல்லியில் அரங்கேறியுள்ளது.

கிழக்கு டெல்லியின் ஷாதரா பகுதியைச் சேர்ந்த காலீத் (வயது 35) என்பவர் மேலுறை (Jacket) தயாரிக்கும் சிறிய அளவிலான தொழிற்சாலை ஒன்றை Maujpur பகுதியில் நடத்தி வருகிறார்.

அங்குள்ள தொழிலதிபர்கள் பலரிடம் அதிகளவில் பணப்புழக்கம் இருப்பதை அறிந்த காலீத், விரைவாக பணம் சேர்க்கும் பொருட்டு அவர்களிடமிருந்து பணத்தை கொள்ளையடிக்க எண்ணினார். Jacket தயாரிக்க மூலப் பொருட்களை சப்ளை செய்யும்  43 வயது தொழிலதிபர் இலக்காக நிர்ணயித்தார் காலீத்.

குறிப்பிட்ட தொழிலதிபர் கடந்த புதன்கிழமையன்று அதிகளவில் வியாபாரம் செய்திருந்ததால், அவரிடம் அதிக பணம் இருக்கும் என்ற கணிப்பில் அன்றைய தினமே அவரை வழிமறித்து கொள்ளையடிக்க முடிவெடுத்தார்.

இதற்காக தனது நண்பர்கள் 4 பேரை சேர்த்துக்கொண்ட காலீத், தொழிலதிபர் வீட்டிற்கு திரும்பும் வழியில் காத்திருந்தார். அப்போது தனது இருசக்கர வாகனத்தில் அந்த தொழிலதிபர் இரவு 9.35 மணிக்கு வீடு நோக்கி வந்து கொண்டிருந்த போது காலீத் உள்ளிட்ட அவரது நண்பர்கள் நால்வரும் அவரை வழிமறித்து அவரது கண்களில் மிளகாய் பொடியை தூவிவிட்டு, கையில் இருந்த துப்பாக்கி மூலம் வானில் சுட்டு அவரது கைப்பையை தருமாறு மிரட்டியுள்ளனர். பின்னர் அவரது ஸ்கூட்டரின் சேமிப்பு பகுதியில் பணத்தை வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர்கள் பறித்துச் சென்றனர்.

இது தொடர்பாக அந்த தொழிலதிபர் ஆனந்த் விஹார் காவல்நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து அதன் மூலம் அச்செயலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். அப்போது இந்த கொள்ளைச் சம்பவம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் காவல்துறையினருக்கு தெரியவந்தது.

பொதுவாகவே அந்த பகுதியில் உள்ள தொழிலதிபர்கள் வியாபாரம் முடிந்து வீடுகளுக்கு திரும்பும் போது லட்சக்கணக்கில் பணத்தை பைகளில் எடுத்துச் செல்வது வாடிக்கை என்பதை அறிந்திருந்ததாலேயே இது போன்ற திட்டத்தை தீட்டியதாக காலீத் தெரிவித்தார். 

எப்படியும் அந்த தொழிலதிபரிடம் அன்றைய தினம் 25 முதல் 30 லட்ச ரூபாய் இருக்கும் என்பதால் அவரிடம் இருந்து பணத்தை கொள்ளையடித்து ஆளுக்கு 5 லட்ச ரூபாயை பிரித்துக் கொள்ளலாம் என திட்டம் தீட்டியிருந்ததாகவும், அன்றைய தினம் இரவில் குறிப்பிட்ட தொழிலதிபர் எடுத்து வந்த பை மிகவும் பருமனாக இருந்ததால் நல்ல தொகை இருக்கும் என எதிர்பார்த்தோம் என்றாலும் அவரிடம் கொள்ளையடித்துவிட்டு சென்று பார்த்த போது தான் அதில் ஒரேயொரு 5 ரூபாய் காயின் இருந்ததை கண்டு தாங்கள் அதிர்ச்சியடைந்ததாக காலீத் தெரிவித்தார். 

மேலும் இவர்கள் திருட்டு தொழிலுக்கு புதுமுகம் என்பதால் தொழிலதிபரிடம் இருந்து திருடிச்சென்ற ஸ்கூட்டரை யாரிடம் விற்பனை செய்வது என்பது தெரியாமல் தடுமாறிவந்துதும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது. மேலும் கொள்ளையடிக்கும் சமயத்தில் அந்த தொழிலதிபரின் சட்டைப்பையில் 10,000 ரூபாய் பணம் இருந்தைக்கூட கொள்ளையர்கள் அறியாமல் இருந்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
இவர்கள் அனைவரையும் பின்னர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த விவகாரம் காவல்துறையினர் மட்டுமல்லாது பொதுமக்கள் மத்தியில் நகைப்புக்குரியதாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Categories: குற்றம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருவண்ணாமலை அருகே சொத்துக்காக பெற்ற தாய் மீது கொலைவெறித்

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

போச்சம்பள்ளி அருகே கிணறு சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட

ரயில் பயணிகளிடம் 500க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்களில்

டெல்லியில் உள்ள விஜய் விகார் பகுதிக்கு அருகில், சிகரெட்

தற்போதைய செய்திகள் Aug 21
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )