முகப்பு > உலகம்

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இந்திய துணைத் தூதரகத்தில் ஒப்படைப்பு!

January 06, 2017

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இந்திய துணைத் தூதரகத்தில் ஒப்படைப்பு!


இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 39 மீனவர்கள் இந்திய துணைத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த மீனவர்களில் 39 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

ஊர்காவல்துறை நீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில், சிறையில் இருந்து இவர்கள் இன்று விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை தமிழகத்திற்கு அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளை தூதரக அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். 

இதனிடையே, மேலும் 12 தமிழக மீனவர்களை விடுவிக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இலங்கை சிறைகளில் இருந்து இதுவரை மொத்தம் 51 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், நேற்று கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் கொண்டுச் செல்லப்பட்ட  10 மீனவர்கள் விடுவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விடுவிக்கப்பட்ட மீனவர்கள் நாளை அல்லது நாளை மறுநாள் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Categories : உலகம் : உலகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்