முகப்பு > உலகம்

ராஜபக்சேவின் கனவு பலிக்காது : சிறிசேனா

January 07, 2017

ராஜபக்சேவின் கனவு பலிக்காது : சிறிசேனா


இலங்கை அரசு விரைவில் கவிழும் என்ற ராஜபக்சேவின் கனவு பலிக்காது என்று அந்நாட்டு அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.

கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் சிறிசேனா,  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசு 2020-ம் ஆண்டுக்கு முன் கவிழாது என்றார். 

மக்கள் நினைத்தால், தேர்தல் வழியாகவே இந்த அரசு மாற்றப்படும், வேறு யாராலும் இந்த ஆட்சியை அகற்ற முடியாது என்று கூறினார். 

இலங்கையில் சிறிசேனா தலைமையிலான ஆட்சி விரைவில் கவிழ்ந்து விடும் என்று முன்னாள் அதிபர் ராஜபக்சே அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories : உலகம் : உலகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்