முகப்பு > தமிழகம்

பக்திப் பாடகர் பித்துக்குளி முருகதாஸ் மரணம்

November 17, 2015

பக்திப் பாடகர் பித்துக்குளி முருகதாஸ் மரணம்


பிரபல பக்திப் பாடகர் பித்துக்குளி முருகதாஸ் (95) இன்று காலை சென்னையில் காலமானார். 

முருகக் கடவுளை போற்றி அதிகமான பாடல்களை பாடியுள்ள பித்துக்குளி முருகதாஸ்,  1920-ம் ஆண்டு கோவையில் பிறந்தார். இவரது இயற்பெயர் பாலசுப்பிரமணியன் ஆகும்.

இளம் வயதில் சுதந்திர போராட்டங்களில் ஈடுபட்ட முருகதாஸ், 1947-ல் தனது இசைப் பயணத்தை தொடங்கினார்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களை இயற்றி, இசையமைத்து பித்துக்குளி முருகதாஸ் பாடியிருக்கிறார். 

அமெரிக்க, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இசைக் கச்சேரிகளையும் நடத்தியுள்ளார்.

இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

இவரது பெயருக்கு முன் உள்ள பித்துக்குளி என்பது பிரம்மானந்த பரதேசியார் என்ற துறவி முருகதாஸுக்கு சூட்டிய பெயராகும்.

Categories : தமிழகம் : தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்