முகப்பு > தொழில்நுட்பம்

​ஜியோவின் இலவச சேவை நீட்டிப்பு - ரிலையன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

December 01, 2016

​ஜியோவின் இலவச சேவை நீட்டிப்பு - ரிலையன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு


ஜியோவின் இலவச சேவை நீட்டிக்கப்படுவதாக ரிலையன்ஸ் நிறுவன உரிமையாளர் முகேஷ் அம்பானி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் அனைத்து கால்களும் இலவசம், மற்றும் 4G டேட்டா சேவையையும் இலவசமாக உபயோகித்துக் கொள்ளலாம் என்னும் அதிரடி அறிவிப்பை சில மாதங்களுக்கு முன்னர் ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.

மேலும், ஜியோ சிம்களை இலவசமாகவே மக்களுக்கு அளித்தது. இச்சேவை 3 மாத காலத்திற்கு இலவசமாக அளிக்கப்படும் எனவும் அறிவித்திருத்தனர். இதன் காரணமாக இலவச ஜியோ சிம்களை வாங்க பொதுமக்கள் முண்டியடித்துக்கொண்டு ரிலையன்ஸ் கடைகளில் வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர். வீடுகளுக்கே சென்று ரிலையன்சின் ஜியோ சிம்கள் இலவசமாக அளிக்கப்பட்டும் வருகின்றன.

ஜியோவின் வருகையால் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஏர்செல், வோடவோன், ஐடியா முதலிய நிறுவனங்கள் பெரும் பாதிப்படைந்தாலும் ஜியோ ஆப்ஸ், ஜியோ மணி, இலவச திரைப்படங்கள், பாடல்கள், இலவச தொலைக்காட்சி சேவை என அனைத்தையும் இலவசமாக அளிப்பதால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது ஜியோ. இதில் நாடு முழுவதும் 52 மில்லியன் (5 கோடியே 20 லட்சம்) வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜியோவில் இணைபவர்களுக்கு வரவேற்பு சலுகையாக அளிக்கப்படும் இலவச சேவை வரும் டிசம்பருடன் முடிவடையை இருக்கும் நிலையில் இது நீட்டிக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவி வந்தது. 

இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவன உரிமையாளர் முகேஷ் அம்பானி இது தொடர்பாக இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில் தெவித்திருப்பதாவது:

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரையில் ஜியோ சிம்களின் இலவச சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது எனவும், இனி மொபைல் நம்பர் போர்டபிலிட்டியை ஜியோ சிம்கள் சப்போர்ட் செய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை ஜியோ எளிமையாக்கும் எனவும் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

பிரதமரின் ரூபாய் நோட்டு மாற்றம் அறிவிப்பிற்கும் அவர் ஆதரவு தெரிவித்துள்ளார், மின்னணு பணப் பரிமாற்றத்தை ஊக்குவிப்பதால் நாட்டின் பொருளாதாரம் மேம்படும் எனவும், நாட்டின் 100 முக்கிய நகரங்களுக்கு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் விரிவுபடுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2017 மார்ச்-31 வரை ஜியோவின் இலவச சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Categories : தொழில்நுட்பம் : தொழில்நுட்பம் , #ரிலையன்ஸ் , #​ஜியோ

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்