இன்றைய வானிலை

  • 27 °C / 80 °F

Popup

Breaking News

Jallikattu Game

இலவசமாக தொடர்பு கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியது ஏர்டெல்!

December 8, 2016
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
29225 Views

ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக பேசும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கென இரண்டு பிளான்களை அறிவித்துள்ளது, கடந்த செப்டம்பர் மாதம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டிசம்பர் மாதம் வரை இலவசமாக பேசும் வசதி, இலவச இணையதள வசதி, இலவசமாக மெசேஜ் அனுப்பும் வசதிகளுடன் அதிரடியாக களத்தில் குதித்தது. இதனால் மிகக் குறைந்த காலத்தில் மிக அதிக வாடிக்கையாளர்களை பெற்றது. அதே நேரத்தில் மற்ற நிறுவனங்கள் பெரிய சரிவைக் கண்டன.

தற்போது ஜியோ நிறுவனம் இந்த இலவச சேவையை "Happy New Year Offer" என்ற பெயரில் 2017 மார்ச் மாதம் வரை நீட்டித்துள்ளது. இந்த அறிவிப்பிற்கு பிறகு ஏர்டெல் நிறுவனம் இந்த இலவச சேவையை அறிவித்துள்ளது. ரூபாய் 345 மற்றும் ரூபாய் 145-க்கு இந்த பிளான்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூபாய் 345 பிளான் உபயோகிப்பவர்கள் இந்தியா முழுவதும் இலவசமாக பேச இயலும். மற்றும் 1GB 4G data-உம் பயன்படுத்திக்கொள்ளலாம். 3G/4G வசதி இல்லாத பயன்பாட்டாளர்கள் 50MB data பயன்படுத்தலாம். ரூபாய் 145 ப்ளான் உபயோகிப்பவர்கள் இந்தியா முழுவதும் ஏர்டெல் உபயோகிப்பவர்களுடன் மட்டும் இலவசமாக பேச இயலும் மற்றும் 300MB 4G data இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். இதிலும் 3G/4G வசதி இல்லாத பயன்பாட்டாளர்கள் 50MB data பயன்படுத்தலாம்.

இரண்டு பிளான்களும் 28 நாட்கள் கால அளவு வரை உபயோகப்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் இந்த விலையானது மாறுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஆரம்பம் தான் என்றும் இதுபோல் இன்னும் நிறைய ப்ளான்கள் அறிவிக்கப்படவுள்ளதாகவும் ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏர்டெல் மட்டுமின்றி, ஏர்செல் நிறுவனமும் மூன்று மாதங்களுக்கு இலவச சேவையை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

புதுச்சேரி பாஜக மாநில தலைவர் தம்மை தரம் தாழ்ந்து விமர்சித்ததாகக்

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் அருகே நக்சல்களுக்கும், பாதுகாப்பு

விமானப் போக்குவரத்துத்துறை மூலம் நாட்டில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக மாநிலம் எதிர்ப்பு தெரிவித்தால்

வங்கிககளில் 900 கோடி கடன் பெற்ற Rotomac பேனா தயாரிப்பு நிறுவனத்தின்

தற்போதைய செய்திகள் Feb 19
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.74 (லி)
  • டீசல்
    ₹ 65.96 (லி)