இன்றைய வானிலை

  • 32 ° C / 90 °F

Breaking News

இலவச ஜியோ மொபைலுக்கு ரூ. 27,000-க்கு கட்டண ரசீது? - ரிலையன்ஸ் நிறுவனம் சொல்வது என்ன?

November 26, 2016
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
21086 Views

ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் தனது 4G சிம்களை வெளியிட்டது. அறிமுக சலுகையாக தனது வாடிக்கையாளர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் 31-ம் தேதி வரை அளவற்ற இலவச 4G இணையதள வசதியும், இலவசமாக பேசும் வசதியையும் அளித்திருந்தது. 

இந்நிலையில் குறுந்தகவல் செயிலியான வாட்ஸாப்பில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கொல்கத்தாவில் உள்ள வாடிக்கையாளர் ஒருவருக்கு, ரசீது அனுப்பியுள்ளதாக அந்த ரசீதின் புகைப்படத்துடன் தகவல் பரவி வருகிறது. அவர் 554.37 GB data உபயோகித்துள்ளதகவும், 44.4 நிமிடங்கள் பேசியுள்ளதாகவும் இதற்கு அவர் 27,718 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து ஜியோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. “எங்கள் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் வரை இலவச இணையதள சேவையும், இலவச தொலைபேசி சேவையும் வழங்கியுள்ளது. தற்போது வாட்ஸாப்பில் பரவி வரும் ரசீதின் புகைப்படம் போலியானது எனவும், எங்கள் நிறுவனம் அவ்வாறு எந்தவொரு வாடிக்கையாளருக்கும் ரசீது அனுப்பவில்லை” என தெரிவித்துள்ளது.

இதன்மூலம் கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களை கலக்கி வந்த ஜியோ புரளி முற்றுப் பெற்றுள்ளது.

Categories: தொழில்நுட்பம்
Image
Image தொடர்புடைய செய்திகள்


நியாய விலை கடைகளில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டதற்கு


தங்களுக்கு விளையாடிய கிரிக்கெட் வீரர்களை தக்க

தற்போதைய செய்திகள் Nov 22
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 72.01 (லி)
  • டீசல்
    ₹ 61.4 (லி)